மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்த வழக்கறிஞர் அரிவாளால் வெட்டி படுகொலை.. திருச்சியில் பயங்கரம்
திருச்சி: திருச்சியில் காவல் நிலையத்திற்கு அருகே நேற்றைய தினம் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
Recommended Video
திருச்சி பாலக்கரை கீழ்ப்புத்தூர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார் (30). சரக்கு வாகன ஓட்டுநர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆ்ம தேதி அரியமங்கலம் பகுதியில் உய்யக் கொண்டான் வாய்க்கால் அருகே கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக கீழ்ப்புதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபி கண்ணன் (32) தூண்டுதலின்பேரில் இந்க கொலை நடந்ததாக தெரிகிறது.

கோபிகண்ணன் நண்பர்கள்
இதையடுத்து கோபிகண்ணனின் நண்பர்களான வரகனேரியைச் சேர்ந்த ரவுடி ஜாகீர் உசேன், ஆனந்த், பிச்சை முத்து, ரமேஷ், சுரேஷ் கிருபாகரன் ஆகியோரை அரியமங்கலம் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கோபிகண்ணனை திண்டுக்கல் பிள்ளையார்நத்தம் பகுதியில் கைது செய்தனர்.

கோபிகண்ணன்
பின்னர் திருச்சி மத்திய சிறையில் கோபிகண்ணன் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கோபிகண்ணன், நேற்று இரவு திருச்சி நீதிமன்ற காவல் நிலையம் வழியாக வந்து கொண்டிருந்தார். பீமநகர் செல்லும் சாலையில் தனது மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்.

கொலைக்கு பழிவாங்கல்
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் கோபிகண்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து நீதிமன்ற காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரியமங்கலத்தில் நடந்த ஹேமந்த் குமார் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம்.

விசாரணை
இது தொடர்பானவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். நீதிமன்ற காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் இந்த கொலை நடைபெற்றதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. இதில் கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications