சட்டசபை உள்ளே வேளாண் தனி பட்ஜெட்.. வெளியே நிலத்தில் ரியல் எஸ்டேட் லேஅவுட்.. எகிறி அடிக்கும் கருணாஸ்
திருச்சி: தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கென தனிபட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில் வெளியே ரியல் எஸ்டேட்டுக்கான லே அவுட் போடப்பட்டு வருவதாக முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அக்ரி எக்ஸ்போ 2023 எனும் வேளாண் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த வேளாண் கண்காட்சியை நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய போது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மரபுவழி விவசாயம் பின்பற்றப்படுகிறது. ஆனால் மரபு வழி விவசாயத்தை முதல்முதலில் பின்பற்றியது தமிழ்நாட்டில்தான். ஆனால் அந்த நாட்டில் மரபுவழி விவசாயம் முழுமையாக பின்பற்றப்படவில்லை.
இந்திய அளவில் கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளே பாரம்பரிய விவசாயத்தை முன்னிலைப்படுத்துகிறது. நான் விவசாயியாக மாறியது, ஒரு விபத்து, என் அம்மா, அப்பா எதையும் எனக்காக சேர்த்து வைக்கவில்லை. ஆனால் அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை ஆரோக்கியமாக பெற்றெடுத்ததற்கு என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
மரபு வழி விவசாயத்தை நம் நாடும், தமிழகமும் முழுவதுமாக பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும். இந்த மரபு சார்ந்த பாரம்பரிய இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். அதனை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும். தற்போதுள்ள காலத்தில் தமிழகத்தில் மதுப்பழக்கம் அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஒரு புறம் மது விற்பனை செய்தாலும் அதை வாங்கி குடிப்பதற்காகவாவது அவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு மரபு சார்ந்த இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். நமது மாநில அரசு மது என்னும் நஞ்சை தாராளமாக கொடுக்கும் போது நஞ்சில்லா உணவையும் தாராளமாக வழங்க வேண்டும். சட்டசபையில் விவசாயத்திற்கு என பட்ஜெட் போடப்படுகிறது. வெளியே விவசாய நிலத்தில் லே அவுட் போடப்படுகிறது. அதனை மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
திட்டம் போடுகிற அதிகாரிகளும் அதை கட்டுப்படுத்துகிற அமைச்சர்களும் அவர்களை வழிநடத்தக் கூடிய முதல்வரும்தான் யோசிக்க வேண்டும். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என அவர்களுக்கு தெரியும். நான் சொன்னால் அதில் மாற்றம் வரபோகிறதா? அல்லது குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யப் போகிறார்களா?
15 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலுக்கு செல்லும் போது அங்கிருந்த நிலங்கள் பழங்குடியினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் இன்று வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் கேரளாதான் இயற்கையை விட்டுக் கொடுக்காமல் உள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நம்மாழ்வார் வர வேண்டும் என கருணாஸ் பேசியிருந்தார்.
-
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications