Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதி பேச்சை ‘ட்விஸ்ட்’ செய்த பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாள்வியா.. ‘புக்’ செய்த திருச்சி போலீசார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாள்வியா மீது திருச்சி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசுகையில், இந்த மாநாட்டுக்கு 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்றார்.

Case registered against BJP IT cell president Amit malviya for genocide tweet on udhayanidhi stalin

உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாள்வியா பதிவிட்ட ட்வீட்டில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா கொரோனாவை போன்று சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு பதலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப் படுகொலைக்கு அழைக்கவில்லை என்றும் பல சமூக கேடுகளுக்கு சனாதன தர்மம் தான் காரணம் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும், சனாதன தர்மத்தின் கோட்பாடுகளில் ஜாதி, மத பாகுபாடுகள் இருக்கிறது என்றும், நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன் என்றும் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

பாஜக நிர்வாகி அமித் மாள்வியாவின் பதிவைத் தொடர்ந்து, வட மாநிலங்களில் உதயநிதி பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. உதயநிதி, இந்துக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்ததாக பலரும் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டனர். குறிப்பாக, பாஜக ஐடி விங் பிரிவினர் பலர் உதயநிதிக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். உ.பி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா, உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்தார்.

இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை அரசியல் உள்நோக்கத்துடன் திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாள்வியா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Case registered against BJP IT cell president Amit malviya for genocide tweet on udhayanidhi stalin

உதயநிதி ஸ்டாலின் பேச்சை வேண்டுமென்றே திரித்து, தொடர்ந்து இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் நோக்கில், பல்வேறு பிரிவினருக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியாவும், அவரது தலைமையில் உள்ள பாஜக ஐடி பிரிவினரும் தொடர்ந்து பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை கோரி திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.வி தினகரன் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், அமித் மாளவியா மீது மாநகர குற்றப்பிரிவில் சட்டப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 (A) (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்த்தலும், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தலும்), 504 (உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505 (1) (b) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+