நான் பேசும் போது ஏன் யாரும் கைதட்டவில்லை? என்ன தயக்கம் உங்களுக்கு? திருநாவுக்கரசர் வருத்தம்!
திருச்சி: நான் பேசும் போது ஏன் யாரும் கைதட்ட மாட்டேன் என்கிறீர்கள் என்று வருத்தப்பட்ட திருநாவுக்கரசர் எம்.பி. என்ன தயக்கம் உங்களுக்கு என கூட்டத்தில் இருந்த பொதுமக்களை பார்த்து கேட்ட நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது.
திருநாவுக்கரசரின் இந்தப் பேச்சை மேடையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் துளியும் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
முதலமைச்சரையும், அமைச்சர்களையும் சிரிக்க வைப்பதாக நினைத்துக்கொண்டு திருநாவுக்கரசர் பேசியது அங்கிருந்த பலரையும் முகம் சுளிக்கவும் வைத்திருக்கிறது.

திருச்சி நிகழ்ச்சி
திருச்சி மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க வந்த முதலமைச்சர் ஸ்டாலின், திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் திருச்சி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரும் கலந்துகொண்டார். முதலமைச்சர் பேசுவதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில நிமிடங்கள் பேசுவதற்கு அழைக்கப்பட்டனர்.

திருநாவுக்கரசர் பேச்சு
அந்த வகையில் மைக் பிடித்த காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர், திருச்சி எம்.பி. என்கிற முறையில் முதலமைச்சரை வரவேற்பதாகவும் இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, '' கைதட்ட ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க, நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன், வந்ததில் இருந்து அடக்கம் ஒடுக்கமாக அப்படியே அமர்ந்திருக்கீங்க என கூட்டத்தை நோக்கி பேசினார் திருநாவுக்கரசர்.

என்ன தயக்கம்?
மேலும், கைதட்டுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் என தனக்கு புரியவில்லை என்றும் உங்களை கைதட்டச் சொல்வது முதலமைச்சரை உற்சாகப்படுத்த தானே தவிர வேறு காரணமல்ல என்று விளக்கம் கூட அளித்தார். திருநாவுக்கரசரின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அமைச்சர் பொன்முடி மட்டுமே சிரித்தார். மற்றபடி முதலமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்கள் யாரும் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை.

அரசு நிகழ்ச்சி
காரணம் நடைபெறுவது அரசு நிகழ்ச்சிதானே தவிர கட்சி நிகழ்ச்சியல்ல. இது கூடத் தெரியாமல் கைதட்டலை கேட்டுப்பெறுகிறாரே திருநாவுக்கரசர் என கூட்டத்தில் இருந்தவர்கள் முணுமுணுத்ததை காண முடிந்தது. இதனிடையே சுதாரித்துக்கொண்ட அவர், அடுத்ததாக நலத்திட்ட உதவிகள் தொடர்பாக தனது பேச்சை திருப்பியது குறிப்பிடத்தக்கது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications