பேஸ்புக்கில் விசிக குறித்து அவதூறு... இந்து மக்கள் இயக்க பிரமுகர் அதிரடி கைது
திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட இந்து மக்கள் இயக்க தலைவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இது குறித்து எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஒப்பந்ததாரரும், சமூக ஆர்வலருமான கணேஷ் (42), என்பவர் திருச்சி பொன்மலை போலீசில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம் தொரப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ராஜகோபாலை வியாழக்கிழமை காலை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications