சிறுநீர் ஊற்றி.. நாயை கடிக்கவிட்டு.. மணப்பாறையில் சாதி கொடூரம்! போலீஸ் மீதும் தலித் குடும்பம் புகார்
திருச்சி: மணப்பாறை அருகே உயர்சாதியினரின் தொடர் சாதிய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பட்டியலின குடும்பத்தினர், காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த விடதிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 42). இவரது மனைவி ராசாத்தி (வயது 29). இந்த தம்பதிக்கு 8 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அப்பகுதியில் வாழும் 2 பட்டியல் சமூக குடும்பங்களில் இளங்கோவின் குடும்பமும் ஒன்று. இவரது வீட்டிற்கு அருகே வடிவேலு (வயது 45) என்பவரும் வசித்து வந்து உள்ளார். ஆதிக்க சாதியை சேர்ந்த இவர், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவின் குடும்பத்தினரை தொடர்ந்து சாதி ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

வடிவேலு 8 நாய்களை வளர்த்து வந்து உள்ளார். அவை இளங்கோவின் 6 வயது மகனை விரட்டிச் சென்று உள்ளன. அப்போது கீழே விழுந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் தாய் ராசாத்தி, வடிவேலுவின் மனைவி அழகுமணியிடம் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது அழகுமணி, ராசாத்தியை சாதி பெயரை சொல்லி திட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது. மற்றொரு நாள், வடிவேலுவின் 12 வயது மகன் பாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தங்கள் மகனின் மீது ஊற்றிவிட்டதாக இளங்கோ தெரிவித்து உள்ளார்.
அவரது மனைவி ராசாத்தி கூறுகையில், "கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நான் விறகு எடுப்பதற்காக சென்றபோது அழகுமணி தண்ணீர் குழாயால் என்னை தாக்கி வயிற்றில் உதைந்தார். பஸ் ஸ்டாண்ட் செல்லும் வரை என்னை விரட்டி வந்து தாக்கினார். நான் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 8 ஆம் தேதி வீடு திரும்பினேன்." என்றார். இது தொடர்பாக இளங்கோ மணப்பாறை காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார். ஆனால், காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததால் அக்டோபர் 11 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால், அதற்கு அடுத்த நாளே இளங்கோ வீட்டில் குடும்பத்தோடு இருந்தபோது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளனர். போலீசார் அங்கு வந்து புகைப்படம் எடுத்து சென்று உள்ளார்கள். ஆனாலும், வழக்கு பதிவு செய்யப்படவில்லை என தலித் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதனை அடுத்து தங்களின் பாதுகாப்பு கருதி 15 கிமீ தொலைவில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று தங்கி இருக்கிறார்கள்.
#Casteattrocity #Thread #Groundreport #Read & #RT
— Iniya Nandan (@Iniyanandan25) October 14, 2023
An #SC family from #Manpparai
couldn't go to their own house for the past 3 days fearing safety for life. Despite filing a police complaint, the local PS are reluctant to file an FIR till date. @xpresstn (1/11) pic.twitter.com/I9DlS2pHlb
இந்த நிலையில் மணப்பாறை காவல் நிலையத்தில் இருந்து தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் பேசிய அதிகாரி வடிவேலுவின் குடும்பத்துடன் சமாதானமாக செல்லுமாறு சமரசம் பேசியதாக இளங்கோ கூறுகிறார். ஆனால், தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை வடிவேலு மறுத்து உள்ளார். அதே சமயம், இளங்கோ வீட்டில் கற்கள் வீசப்பட்டதை தமிழ்செல்வி என்ற அண்டைவீட்டு பெண் உறுதிபடுத்தி உள்ளார். ஆனால், யார் கல் வீசியது என்று தங்களுக்கு தெரியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக மணப்பாறை காவல் ஆய்வாளர் ஜேகே கோபி, சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலவில்லை எனவும் கூறுகிறார். ஆனால், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் வந்தவுடனே காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அதை தவறினால் காவல் துறையும் அதற்கு இணையான குற்றத்தை செய்ததாக கருதப்படும் எனவும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் முருகானந்தம் கூறுகிறார். இது தொடர்பாக விசாரித்து வருவதாக எஸ்பி வருண் குமார் கூறி உள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications