Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாஸ்ரூமிலேயே.. டீச்சருடன் அரை நிர்வாண கோலத்தில்.. நெருக்கமா தொட்டு தொட்டு.. 2 ஆசிரியருடன் ஒரே பெண்

கிளாஸ்ரூமிலேயே டீச்சருடன் நெருக்கமாக நின்று பேசியுள்ளனர் ஆசிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கிளாஸ்ரூமில் நடக்கும் அக்கிரமம் இது.. 2 வாத்தியார்களும், தங்கள் சட்டையை கழற்றிவிட்டு, டீச்சரை தொட்டு தொட்டு பேசுகிறார்கள்.. இந்த போட்டோ இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த பெற்றோர்களின் வயிற்றிலும் நெருப்பை அள்ளி போட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது வடக்கு சித்தாம்பூர் என்ற பகுதி.. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

 கிளாஸ்ரூம்

கிளாஸ்ரூம்

இங்கு ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் ரமேஷ்.. 40 வயதாகிறது.. புண்ணியமூர்த்தி, 30 வயதாகிறது.. கடந்த 4 நாட்களுக்கு முன்பு, இவர்கள் 2 பேரும், ஒரு ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்துள்ளனர்.. இது தொடர்பான போட்டோக்கள்தான் வெளியாகி உள்ளது.. கிளாஸ்ரூமிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஆனால் அந்த கிளாஸ்ரூம்களில் பிள்ளைகள் இல்லை என்றே தெரிகிறது.. மாணவர்கள் பள்ளியை விட்டு சென்ற சமயம், அல்லது இடைவேளை நேரத்தில் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

 நெருக்கம்

நெருக்கம்

முதல் போட்டோவில், ஒரு ஆசிரியர் சேரில் உட்கார்ந்துள்ளார்.. அப்போது அவர் அருகே ஒரு டீச்சர், டேபிளில் குனிந்து கொண்டு கேஷூவலாக பேசுகிறார்.. அவரது தோளில் இந்த ஆசிரியர் கை வைத்து, ஜாலியாக அரட்டை அடிக்கிறார்.. ஆசிரியர் கை போடுவதை அந்த டீச்சர் எதிர்க்கவோ, மறுப்பு சொல்லவோ இல்லை.. மாறாக, சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்.. ஒருகையில் செல்போனை பிடித்து கொண்டு,இன்னொரு கையில் டீச்சரின் தோளில் கை வைத்து கொண்டிருக்கிறார் ஆசிரியர்.

கிளாஸ்ரூம்

கிளாஸ்ரூம்

இரண்டாவது போட்டோவில், இன்னொரு ஆசிரியர் கிளாஸ்ரூமின் பெஞ்ச்சுகளுக்கு நடுவில் நின்று கொண்டிருக்கிறார்.. அவருக்கு சட்டை இல்லை.. சட்டையை கழட்டி கையில் பிடித்து கொண்டுள்ளார்.. பேண்ட்டை கழட்டி தோளின்மீது போட்டுக் கொண்டுள்ளார்.. அரை நிர்வாண கோலத்தில் நின்று கொண்டிருக்க, அவருக்கு பக்கத்திலேயே டீச்சர், நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார்.. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 டீச்சரும் ஒருவரே.. வாத்தியார்கள்தான் வேறு வேறு.

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

ஒரே பள்ளியில் இவர்கள் 3 பேருமே பணிபுரிந்து வரும் நிலையில், இப்படி ஒரு கூத்து நடந்துள்ளது.. யார் இந்த போட்டோக்களை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.. இணையத்திலும் பதிவிட்டுவிட்டதால், ஒட்டுமொத்த மாணவர்களும், பெற்றோர்களும், கல்வித்துறையும் கொந்தளித்து போயுள்ளது.. மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் ஆசிரியர்களே இப்படி இருப்பதை கண்டு, ஆத்திரமடைந்தனர்.. பிறகு, இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பேன்ட் - சட்டை

பேன்ட் - சட்டை

இதற்கிடையே சட்டை இல்லாமல் இருந்த அந்த ஆசிரியர்கள் 2 பேரையும் வாத்தலை போலீசில் பள்ளி சார்பாக புகார் செய்தனர்... ஆனால், சட்டை - பேன்ட்டை கழட்டிவிட்டு, அரை நிர்வாணமாக நின்று கொண்டிருந்த ஆசிரியர், போலீசில் ஒரு புகார் தந்துள்ளார்.. அதில், இவர் ஸ்கூலுக்கு வரும்போது மழை வந்துவிட்டதாம்.. அதனால், மழையில் நனைந்து கொண்டே வந்ததாகவும், அப்போது சட்டையை கழற்றி காய வைத்து கொண்டிருந்ததாகவும், அதனை டீச்சருடன் இணைத்து அவதூறாக சித்தரித்து இப்படி போட்டோ போட்டு பரப்பிவிட்டனர், அதனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 ஜட்ஜ் அய்வு

ஜட்ஜ் அய்வு

இதனிடையே, ஏதேச்சையாக முசிறி நீதிமன்ற நீதிபதி ஆய்வுக்கு அங்கே வந்திருந்தார்.. அந்த புகாரை பெற்றுக்கொண்ட அவர், திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தார்... மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்... நடந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, புகாருக்கு ஆளாகியுள்ள 2 ஆசிரியர்களும் சித்தாம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பு பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் 2019-ல் அவர்கள் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு சென்று விட்டார்கள்.

போட்டோக்கள்

போட்டோக்கள்

ஆகவே அவர்கள் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களா? அல்லது இப்போது எடுக்கப்பட்டதா? இப்போது எடுத்திருந்தால் அவர்கள் எதற்காக மறுபடியும் அந்த பள்ளிக்கு சென்றார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.. மேலும், இந்த போட்டோக்களின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.. இந்த போட்டோக்கள் உண்மையா? பொய்யா? என்று நமக்கு உறுதியாக தெரியாவிட்டாலும், பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் வன்கொடுமை புகார்கள் நாளுக்குநாள் அதிகரித்தபடியே உள்ளது கலக்கத்தை தந்து வருகிறது.

 செக்ஸூவல் ஹராஸ்மென்ட்

செக்ஸூவல் ஹராஸ்மென்ட்

நேற்றுகூட ஒரு ஆசிரியர் கைதானார்.. கரூர் மாவட்டம் சேங்கலை அடுத்துள்ள பாப்புரெட்டிபட்டி கிராமத்தில் தனியார் பள்ளியின் ஆசிரியர் அவர்.. அந்த பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து, அசிங்கமான வீடியோக்களையும் அந்த மாணவிக்கு அனுப்பி வைத்து டார்ச்சர் தந்துள்ளார்.. அவர் ஒரு தமிழ் ஆசிரியராம்.. கடைசியில் லாலாபேட்டை போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.. 'செக்ஸூவல் ஹராஸ்மென்ட்டுக்கு சாகற கடைசி பொண்ணு, நானாகத்தான் இருக்கணும்" என்று அன்று கரூர் மாணவி எழுதி வைத்துவிட்டு போன லெட்டரின் ரத்தவாடை இன்னும் வீசிக் கொண்டே இருக்கிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+