பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் கார்த்திகா சிக்கியது எப்படி? புதிய தகவல்கள்
திருச்சி: திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் இயங்கி வந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் கார்த்திகா முதலீடு பெற்று ரூ.50 கோடி மோசடி புகாரில் நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பான பல்வேறு கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 8 இடங்களில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த நகைக்கடையின் விளம்பர தூதுவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகைகள் ராதிகா, சைத்ரா ரெட்டி ஆகியோர் இருந்தார்கள்.

பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக் கடைகளின் உரிமையாளர்களான மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் பிரபலங்களை வைத்து எடுத்த கவர்ச்சி விளம்பரங்களை நம்பி ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர் ஆனால் விளம்பரங்களை நம்பி முதலீடு செய்தவர்களுக்கும், சீட்டு போட்டவர்களுக்கும் பணத்தை கொடுக்கவில்லை.
கடந்த மாதம் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள போலீசில் புகார் கொடுத்துள்ளார்கள். பொதுமக்களைக் கவரும் வகையில் மாதாந்திர நகைச் சீட்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். அதில் தான் பல வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்துள்ளனர். கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. தமிழகம் முழுவதும் உள்ள பிரணவ் ஜூவல்லரி நகைக்கடைக்கு போலீசார் உடனடியாக சீல் வைத்தனர்.
இதனிடையே பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன், அவருடைய மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் உள்பட நிர்வாகிகள் மீது திருச்சி, சென்னை, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த வழக்கு அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுவரை தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 1,250 பேர் தங்களை பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் ஏமாற்றிவிட்டதாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர் மொத்தம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக புகார்கள் இதுவரை வந்துள்ளன. இந்த வழக்கில் பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை மேலாளர் நாராயணன் மட்டும் முதலில் கைது செய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன், கார்த்திகாவை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மதன் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, மதுரையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7-ந்தேதி மதன் சரணடைந்தார். அவரை இரண்டு வாரங்கள் அதாவது வரும் டிசம்பர் 21-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜோதி அப்போது உத்தரவிட்டார். இதையடுத்து பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே மதனிடம் விசாரணை நடத்தி பணத்தை மீட்க வேண்டி இருப்பதால், மதனுக்கு 10 நாள் போலீஸ் காவல் கேட்டு திருச்சி பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து வருகிற 18-ந்தேதி வரை மதனை போலீஸ் காவலில் விசாரிக்க போலீசாருக்கு கடந்த 11-ந்தேதி நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார்.
இதன் காரணமாக போலீசார் மதனை சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து முதலீட்டாளர்களின் பணத்தை மீட்க கடந்த 3 நாட்களாக திருச்சி மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகள், கடைகள் போன்ற இடங்களுக்கு மதனை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 8-ந்தேதி பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரும், மதனின் மனைவியுமான கார்த்திகாவின் முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து கார்த்திகாவை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடினர்.
இந்த நிலையில் திருச்சியில் உள்ள வீட்டுக்கு வந்த கார்த்திகாவை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் டிஎஸ்பி லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.52 ஆயிரம் மற்றும் 2 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் நேற்று மாலையே மதுரையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கார்த்திகா சிறையில் அடைக்கப்பட்டார். மதனை போல் கார்த்திகாவையும் காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளது. போலீசார் பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன், கார்த்திகா ஆகியோரிடம் முழுமையாக விசாரித்தால் தான் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர், எவ்வளவு கோடி மோசடி நடந்தது, அந்த பணம் என்ன ஆனது என்பது தெரியவரும். எனவே இதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
அதேநேரம் நடிகர், நடிகைகளின் கவர்ச்சி விளம்பரங்களை நம்பி முதலீடு செய்துவிட்டு ஏமாற்றத்துடன் தவிக்கும் மதுரை, திருச்சி, நாகர்கோவில், புதுச்சேரி, கும்பகோணம், சென்னை பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதில் மதுரையில் தான் அதிகமான மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications