மலைக்கோட்டையே புத்தம் புது வாசம் வீச போகுது! இந்த தொழிற்சாலை வருதா? சீனியர் அமைச்சரின் முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 'சென்ட் ' தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சா் கே. என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், எட்டரை கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு 19.76 கோடியிலான முடிவுற்ற திட்டப் பணிகளை அா்ப்பணித்தும் சில புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

K.N.Nehru says that Scent factory will be set up in Trichy

பின்னர் அமைச்சர் கே. என். நேரு பேசியதாவது : முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த விழாவில் ரூ. 3.57 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 14 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ரூ. 45.90 லட்சத்தில் ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 18 வாகனங்களும், ரூ 12.68 லட்சத்தில் 2 டிராக்டா்களும் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 32 பேருக்கு ரூ.16 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும், 82 சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 5.32 கோடியில் கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 10.12 கோடியில் 162 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்க ஒரு வாசனைத் திரவிய (சென்ட்) தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை வைத்துள்ளனா். இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
மிகவும் குறுகிய வயலூா் சாலையை ரூ. 138.91 கோடியில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

அந்தநல்லூா் பகுதி பொதுமக்களின் முக்கிய கோரிக்கையான குடிநீரானது தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் புங்கனூா், கள்ளிக்குடி, குண்டூா், உள்ளிட்ட 7 ஏரிகளை செப்பனிட்டு, அதன் மூலம் தூய்மையான குடிநீா் வழங்கும் திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன.

K.N.Nehru says that Scent factory will be set up in Trichy

அதுபோல ரூ. 9.90 கோடியில் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம், புதிய பூ மாா்க்கெட் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் ஏழைகளுக்கான இலவச பட்டா 1800 பேருக்கு வழங்கத் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். அந்த வகையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அனைத்து தேவைகளையும் செய்துதர அரசு தயாராக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தேவநாதன், மகளிா் திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கங்காதாரிணி, எம்எல்ஏ எம். பழனியாண்டி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், அந்தநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் துரைராஜ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+