இந்துக்களை பிடிக்காத திமுக அரசு.. பாஜக ஆட்சியமைத்தால் அறநிலைய துறையே இருக்காது.. எல்.முருகன் ஆவேசம்!
திருச்சி: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் இன்று பக்தர்கள் சிலர் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோவில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பக்தர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ரத்தம் சொட்டச் சொட்ட ஐயப்ப பக்தர் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும் தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Dr.L.Murugan (@Murugan_MoS) December 12, 2023
ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி… pic.twitter.com/Ohh0N6IvPN
எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், "கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும் தொடர்ந்து முழு மூச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அறநிலையத்துறை பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை. இந்துக்களை பிடிக்காத திமுக அரசிடம் வேறு எதை எதிபார்க்க முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். முன்னதாக, அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாதயாத்திரையின் போது பேசுகையில், பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே, அறநிலையத்துறை என்று ஒரு துறையே இருக்காது எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications