படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க ஆரம்பித்தேன்.. கொள்ளையன் முருகன் வாக்குமூலம்
கொள்ளையன் முருகன் வாக்குமூலம் தந்துள்ளான்
Recommended Video
திருச்சி: திரும்பவும் படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க ஆரம்பித்தேன் என்றும் இதற்காகவே கொள்ளை சம்பவங்கள் தொடர்பான சினிமாக்களை விரும்பி பார்ப்பேன் என்றும் போலீசில் கொள்ளையன் முருகன் வாக்குமூலம் தந்துள்ளான்.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் சுவரில் ஓட்டை போட்டு ரூ.12 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.
இதில், திருவாரூரை சேர்ந்த முருகன், சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன் உள்பட 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது, பின்னர், முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

விசாரணை
சுரேஷிடம் ஏற்கனவே விசாரணை நடந்து வரும் நிலையில், முருகனை 55 நாட்களுக்கு பிறகு, பெங்களூரில் இருந்து திருச்சி போலீசார் அழைத்து வந்துள்ளனர். முருகனிடம் 14 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கேட்ட நிலையில், 7நாட்கள் மட்டுமே கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.

பொருட்கள்
இதையடுத்து, முருகனை ஒரு ரகசிய இடத்துக்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிப்பதற்கு முன்பு, திருவெறும்பூர் அருகே நறுங்குழல் நாயகிநகரில் ஒரு வீட்டில் முருகன் 2 மாதமாக வாடகைக்கு தங்கியிருந்தது தெரியவந்தது. அதனால், அந்த வீட்டுக்கு முருகனை அழைத்து சென்ற போலீசார் அங்கிருந்து சில பொருட்களை கைப்பற்றினர்.

நகைகள்
பின்னர் கொள்ளை குறித்து போலீசாரிடம் முருகன் சொன்ன வாக்குமூலம் இதுதான்: "லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்து விட்டு நகைகளுடன் மதுரைக்கு சென்றோம். அங்கு தராசு மூலம் நகைகளை பிரித்து கொண்டோம். பின்னர் சுரேஷ் திருவாரூருக்கு கிளம்பி சென்றான். நான் சென்னைக்கு சென்றேன்.

சினிமா படம்
போற வழியில்தான், பெரம்பலூர் அருகே கொள்ளையடித்த நகைகளை ஒரு காட்டில் புதைத்து வைத்தேன். ஆனால் திருவாரூரில் மணிகண்டன் மாட்டி கொண்டதால் நான் சரண் அடைய வேண்டிய நிலை வந்தது. இல்லையென்றால் கொள்ளையடித்த நகைகளை கொண்டு இன்னும் நல்ல படங்களை தயாரித்து இருப்பேன்.

குறும்படம்
தமிழில் சினிமா படம் எடுத்து நிறைய செலவாகி விட்டது.. அதனால், தெலுங்கில் என் அக்கா மகன் சுரேஷை வைத்து ஷார்ட் படம் ஒன்று தயாரித்தேன். ஆனால் அது தோல்வியடைந்துவிட்டது. திரும்பவும் படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க ஆரம்பித்தேன். இதற்காகவே கொள்ளை சம்பவங்கள் தொடர்பான சினிமாக்களை விரும்பி பார்ப்பேன்.. எப்படி மாட்டிக் கொள்ளாமல் கொள்ளை அடிப்பது எப்படி என இந்த சினிமாக்கள் பார்த்து தெரிந்து கொண்டேன்" என்றான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications