இன்று மட்டும் 4 தொகுதி டார்க்கெட்! திருமா, ஜோதிமணி, துரைவைகோவுக்கு எதிராக களமிறங்கிய ஜேபிநட்டா!
திருச்சி: வரும் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக 4 தொகுதிகளில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 19 இடங்களில் பாஜக போட்டியிடுகிறார். மீதமுள்ள 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள், ஜிகேவாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதி, டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 தொகுதி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி, பாரிவேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, தேவநாதன் யாதவின் இமகமுக, ஜான்பாண்டியின் தமமுகவுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்தார். அவர் மீண்டும் வரும் 9, 10, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்து பிரசாரம் செய்ய இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வர இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தமிழகத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார்.
பாஜக ஷாக்.. திருச்சியில் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு! போலீஸ் கூறிய காரணம் இதுதான்
இதற்காக ஜேபி நட்டா கேரளாவில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவே திருச்சி வந்தார். திருச்சி வந்திறங்கிய ஜேபி நட்டாவுக்கு பாஜக தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஜேபி நட்டா இன்று காலையில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் சிதம்பரம் தொகுதிக்கு சென்றார். அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அதன்பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கரூருக்கு ஜேபி நட்டா புறப்பட்டு சென்றார். கரூர் பாஜக வேட்பாளர் விவி செந்தில்நாதனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பிறகு விருதுநகர் சென்று அங்கு பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக ஜேபி நட்டா பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு மீண்டும் திருச்சி வரும் ஜேபி நட்டா அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். திருச்சியில் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் போலீசார் மறுத்துவிட்டனர்.
அதோடு வாகன பேரணியின் ரூட்டை மாற்றும்படி பாஜகவிடம் கூறியுள்ளனர். இதனால் இன்று வாகன பேரணி நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை வாகன பேரணி இல்லாவிட்டால் ஜேபி நட்டா, செந்தில் நாதனுக்கு ஆதரவாக பிரசாரம் மட்டுமே செய்வார். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஜேபி நட்டா விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications