களமிறங்கிய காவல்துறை.. சூர்யாவை உதைத்தால் 1 லட்சம் பரிசு அறிவித்த பாமக நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி மீது 5 பிரிவுகளில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான, ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு மொத்தம் 9 கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு சூர்யா அளித்த பதிலில் வருத்தம் தெரிவிக்கவில்லை, அதேநேரம், அன்புமணிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

 வேல் திரைப்படம்

வேல் திரைப்படம்

இந்நிலையில் மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையரங்கு ஒன்றில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற பாமகவினர், வேல் திரைப்படத்தை நிறுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். வேல் திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. அப்போது சூர்யாவின் போஸ்டர்களையும் பாமகவினர் கிழித்து முழக்கமிட்டனர்.

தாக்கினால் பணம்

தாக்கினால் பணம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் உதைத்து தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் 1 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார்.

அறிக்கைகள்

அறிக்கைகள்

இதுபோல பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டது, பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை கண்டிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை வைத்தனர். இந்த அறிவிப்புக்குப் பிறகு தான் சூர்யாவுக்காக திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

Recommended Video

    Surya மன்னிப்பு கேட்க வேண்டும் | Jai Bhim Vanniyar Issue | Oneindia Tamil
     அரசு நடவடிக்கை

    அரசு நடவடிக்கை

    அதேநேரம், தமிழக அரசு தரப்பில் இந்த சர்ச்சைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஒரு தரப்பு குற்றம்சாட்டியது. இந்த நிலையில்தான் மிரட்டல் விடுத்த நபருக்கு எதிராக மயிலாடுதுறை போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்வதற்கு தேடிவருகின்றனர். சென்னையிலுள்ள சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+