அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. “அதிமுக ஆட்சி தான் காரணம்”.. சொல்வது அமைச்சர்!
திருச்சி: திருச்சியில் அரசு பேருந்தில் இருந்து நடத்துநர், அவர் அமர்ந்திருந்த இருக்கையோடு சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் மதியம் அரசு நகரப் பேருந்து புறப்பட்டது. அப்போது அந்தப் பேருந்தில், ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்த இருக்கை ஒன்றில் எடமலைபட்டி புதூரை சேர்ந்த நடத்துநர் முருகேசன் (54) அமர்ந்திருந்தார்.

பேருந்து, கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, சேதமடைந்த இருக்கை முழுவதும் கழன்று, பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் சேர்ந்து, நடத்துநர் முருகேசனும் சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.
நடத்துநர், இருக்கையுடன் பேருந்தில் இருந்து பறந்து விழுந்ததைப் பார்த்து பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதால், ஓட்டுநர் பாஸ்கரன் பேருந்தை நிறுத்தினார். காயமடைந்த நடத்துநர் முருகேசனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள், வேறு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சேதமடைந்த பேருந்து உடனே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், பேருந்தின் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியது.
இதன் தொடர்ச்சியாக, அரசுப் பேருந்து சேதமடைந்திருந்த நிலையிலும் இயக்கியதன் காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சியில் அரசுப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த சம்பவம் குறித்து இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் கடலூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், "கடந்த அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. தற்போது புதிதாக 7 ஆயிரம் பேருந்துகள் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். முதற்கட்டமாக 350 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய பேருந்துகள் வர வர, பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றப்படும். இந்த ஆண்டுக்குள் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பேருந்துகள் முழுமையாக மாற்றப்படும்." எனத் தெரிவித்தார்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!











Click it and Unblock the Notifications