5வதாக பிறந்த 2 மாத குழந்தையை விற்று ரம்மி விளையாடிய தந்தை.. கொத்தாக தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி : திருச்சி மாவட்டம் உறையூர் அருகே தனக்கு ஐந்தாவதாக பிறந்த இரண்டு மாத ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது மற்றும் சூதாட்டத்தில் அடிமையானவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று அல்லது ஊழியத்தை முழுவதுமாக செலவு செய்து குடும்பத்தினரை தவிக்க விட்டு செல்லும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.

குறிப்பாக தற்போது ஆன்லைன் ரம்மி வந்துவிட்ட பிறகு பேருந்து பயணம் முதல் உறங்கச் செல்வது வரை கடன் வாங்கி கடன் வாங்கி விளையாண்டு அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சியில் அதிர்ச்சி

திருச்சியில் அதிர்ச்சி

இந்த நிலையில் சீட்டு விளையாட பணம் இல்லாததால் தங்களுக்கு ஐந்தாவதாக பிறந்த 2 மாத ஆண் ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று சூதாடிய பொறுப்பில்லா தந்தையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த அப்துல் சலாம் என்பவருக்கும் கைருண் நிஷா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளது.

 குழந்தை மாயம்

குழந்தை மாயம்

இந்த நிலையில் கடந்த ஆண்டு நிசா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த நவம்பர் மாதம் ஐந்தாவதாக ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே மது மற்றும் சூதாட்டத்தின் அடிமையான அப்துல் சலாம் இந்த குழந்தை பிறந்ததால் தங்கள் குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடுவதாகவும் குழந்தையை யாருக்காவது விற்று விடுவோம் என கூறி வந்துள்ளார். இதற்கு நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐந்தாவதாக பிறந்த ஆண்குழந்தை மாயமானது.

 குழந்தை விற்பனை

குழந்தை விற்பனை


தனது குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்த கைருண் நிசா இதுகுறித்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது கணவர் கூறியது குறித்து காவல் நிலையத்தில் அவர் தெரிவித்துள்ளார் இடத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி போலீசார் அப்துல் கலாமை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை தொட்டியம் கீழ சீனிவாசன் நல்லூரைச் சேர்ந்த சந்தனகுமார் என்பவருக்கு விற்றதாகவும் இதற்கு தனது நண்பரான ஆரோக்கியராஜ் என்பவர் உதவியதாகவும் கூறியுள்ளார்.

 3 பேர் கைது

3 பேர் கைது

2 மாத ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதோடு அந்த பணத்தில் மது மற்றும் சூதாட்டத்தின் தான் செலவழித்து விட்டதாகவும் அப்துல் சலாம் கூறினார்.இதனால் கடும் அதிர்ச்சிக்கு ஆளான போலீசார் தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்தி சந்தனகுமாரிடம் இருந்த குழந்தையை மீட்டு கைருண்நிசாவிடம் ஓப்படைத்தனர். மேலும் குழந்தை விற்பனை தொடர்பாக மூவரையும் கைது செய்துள்ள போலீசார் இதில் வேறு ஏதேனும் கும்பலுக்குத் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+