திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்யாத மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி, தன்னாட்சி அல்லாத கல்லூரிகளிலும், தொலைக்கல்வி மையத்திலும் இளநிலை பட்டப்படிப்பில் 2019-20-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும், முதுநிலை பட்டப்படிப்பில் 2020-21-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்ய இயலாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்று. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், அரியலூர், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகள் இருக்கின்றன. சென்னையில் சென்னை பல்கலைக்கழகம் போல், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம் போல், மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம் போல் மிகவும் முக்கியமான பல்கலைக்கழகம் ஆகும்.இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தான் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கிறார்கள். பல ஆண்டுகளாக பட்டப்படிப்பு நிறைவு செய்யாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி, தன்னாட்சி அல்லாத கல்லூரிகளிலும், தொலைக்கல்வி மையத்திலும் இளநிலை பட்டப்படிப்பில் 2019-20-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும், முதுநிலை பட்டப்படிப்பில் 2020-21-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருந்த என் பிளஸ் 2 கால வரையறைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்ய இயலாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது.
இதில் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் திட்ட கட்டுரை என நிலுவைத் தாள்கள் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வருகிற ஏப்ரல் பருவத்தில் மட்டும் சிறப்பு தேர்வு எழுதிக் கொள்ள பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கிறது. இத்தேர்வுகள் நடத்துவது பற்றி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், தொலைக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு விட்டது.
நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளையோ அல்லது தொலைக்கல்வி மையத்தையோ அணுகி தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்திலும், தொலைக்கல்வி மைய மாணவர்கள் www.bdu.ac.in/cde என்ற இணையதளத்திலும் சென்று தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications