வாய்க்கால் கரையில் அத்துமீறிய தொழிலாளி.. கைவிரலை கடித்து தப்பிய மாணவி.. 4 வருடம் சிறை!
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் 4 வருட சிறை தண்டனை கிடைத்துள்ளது.
Recommended Video

திருச்சி: வாய்க்கால் கரைக்கு மாணவியை தூக்கி கொண்டு போய் பலாத்காரம் செய்ய முயன்ற பால்ராஜூக்கு 4 வருஷம் தண்டனை கிடைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஜம்புமடை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு வயது 42.

கடந்த 2017, ஜூலை மாதம், பள்ளி மாணவி ஒருவரை வாய்க்கால் கரைக்கு தூக்கி சென்று விட்டார். அங்கு அப்பெண்ணை பலாத்காரம் செய்யவும் முயன்றார்.
ஆனால் பள்ளி மாணவியோ இந்த காமுகனிடம் போராடியதுடன், பால்ராஜின் கைவிரலை கடித்து துப்பி விட்டார். இதில் ரத்தம் கொட்ட ஆரம்பித்ததும், வலியால் துடித்தார் பால்ராஜ். இந்த சமயத்தில் மாணவி அங்கிருந்து தப்பி ஓடிவந்து பெற்றோரிடம் நடந்ததை சொன்னார்.
இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனடியாக தா.பேட்டை போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் பால்ராஜ் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இது சம்பந்தமான வழக்கும் திருச்சி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடப்பட்டு வந்தது.
கடைசியில் நேற்று எல்லா சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு சொல்லப்பட்டது. மாணவியை சீரழிக்க செய்ய முயன்ற பால்ராஜுக்கு 4 வருஷம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருஷம் சிறை தண்டனை என்றும் நீதிபதி ஜி.மகிழேந்தி தீர்ப்பு கூறினார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications