காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டி.. திருச்சி நாதக மாநாட்டில் வெளியான அறிவிப்பு!
திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடக்கும் நாதக மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ள சீமான், மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இன்னும் 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இம்முறை தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என்று 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாதக சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்திருக்கிறார். அதன்படி கும்மிடிப்பூண்டி - வழக்கறிஞர் தர், பொன்னேரி- பொறியாளர் ராஜாத்தி, திருத்தணி - முனைவர் சந்திரன் ஆகியோர் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர். அதேபோல் ஆர்கே நகர்- வெண்ணிலா தாயுமானவன் போட்டியிடுகிறார்.
பெரம்பூர்- வெற்றித்தமிழன், கொளத்தூர்- வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன் லூடர் சேத் போட்டியிடுகின்றனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் இயக்குநர் மு.களஞ்சியம், எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினி என்பவரும் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர். அதேபோல் வீரப்பன் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மதுரவாயல் - ரேவதி, அம்பத்தூர் - சிலம்பரசன், மாதவரம் - கிருத்திகா ஏழுமலை, திருவொற்றியூர் - சத்யா பாஸ்கர், அண்ணாநகர் - வழக்கறிஞர் சங்கர், விருகம்பாக்கம் - சந்தோஷ், சைதாப்பேட்டை - வித்யா, தி நகர் - அனுஷா விஜயகுமார், அணைக்கட்டு - ரவிகுமார், கீழ்வைத்தியனாங்குப்பம் - கலையேந்திரி, குடியாத்தம் - இமலன் ஆகியோர் நாதக சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 சதவீதம் வாக்குகளை காரைக்குடி தொகுதியில் நாதக பெற்றது. அதேபோல் சீமானின் சொந்த ஊரும் சிவகங்கையில் இருப்பதால், இம்முறை சட்டசபை செல்ல வேண்டும் என்பதில் சீமான் தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications