எவ்வளோ பெரிய பட்டா கத்தி.. நட்ட நடு வீதியில் கேக்கை வெட்டிய மாணவர்கள்.. திருச்சியில் பரபரப்பு
Recommended Video

திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவர்கள் பிரிவு உபசார நிகழ்ச்சியை நட்ட நடு சாலையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டு வகுப்புகள் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்துவிட்டது. இதையொட்டி எம்.காம் 2-ஆம் ஆண்டு மாணவர்கள் பிரிவு உபசார விழாவை கொண்டாடினர்.
கல்லூரி நுழைவு வாயில் அருகே உள்ள சாலையில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது பெரிய அளவிலான கேக்கை வைத்தனர்.

பரபரப்பு
பின்னர் பயங்கர சப்தத்துடன் மாணவர்கள் கூச்சல் எழுப்பி கையில் இருந்த பட்டா கத்தியுடன் கேக்கை வெட்டினர். இது அவ்வழியாக சாலையில் செல்வோர் கல்லூரிக்கு வருவோர் போவோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொண்டாட்டத்தை சக மாணவர்கள் செல்போனில் படம் பிடித்து அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கூட்டாளிகள் கைது
சென்னையில் பிரபல ரவுடி பினு, தனது பிறந்தநாளின் போது பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய ரவுடி ஒருவரும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.

மலைப் பகுதியில் கேக்
அது போல் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி சூரியின் மகன் ஜீசஸ்(வயது 32). இவன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகி உள்ளன. ரவுடியான ஜீசஸ் தனது பிறந்தநாளை சக ரவுடிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் கொண்டாடினார்.

பிறந்தநாள்
அப்போது, பிரமாண்டமான கேக்கை சுமார் 2 அடி நீளமுள்ள அரிவாளால் வெட்டி ஜீசஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

ரவுடிகள் கைது
விசாரணையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஜீசஸ் மற்றும் அவனது சகோதரர்கள் சிலம்பரசன்(32), மோசஸ்(29) மற்றும் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(32), பனமரத்துப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்(35) ஆகியோர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன என்பதால் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

வைரல்
இந்த சம்பவம் அடங்குவதற்குள் திருச்சியில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் ‘கேக்' வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்லூரி மாணவர்களும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications