வாழ்க்கையின் முதல் பாதியில் கஷ்டப்பட்டால்! எதிர்காலம் சூப்பர்! திருச்சி டிஐஜி வருண்குமார் பேச்சு
திருச்சி: வாழ்க்கையின் முதல் பாதியில் யார் கஷ்டப்பட்டு படிக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கை இரண்டாம் பாதியில் நன்றாக இருக்கும் என்று திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியிலே பாவை அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண்குமார் திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் மாணவர்களிடம் பேசுகையில்,

கல்வியால் மட்டும்தான் இன்று சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கிறோம். நான் மட்டுமல்ல என்னை போல் பலர் அரசு வேலைக்கு செல்வதால் சமூகத்திலும் குடும்பத்திலும் மரியாதை கிடைக்கிறது.
வாழ்க்கையின் முதல் பாதியில் யார் கஷ்டப்பட்டு படிக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கை இரண்டாம் பாதியில் நன்றாக இருக்கும். நானும் என் வாழ்க்கையின் முதல் பாதியில் கஷ்டப்பட்டு படித்தேன் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். கல்வி ஒன்று தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
பணம் இருந்தால் ஒருவருக்கு பலம் கிடைக்கும். பணத்தை தவறான வழியில் சம்பாதிக்க கூடாது நன்றாக படித்து பணம் சம்பாதிக்க வேண்டும். அதே போல நல்ல நண்பர்களையும் உருவாக்கி கொள்ள வேண்டும்.
சகதியில் மாட்டிக் கொண்டால் போராடி வர கூடாது. மூளையை பயன்படுத்தி வெளியே வர வேண்டும். அதே போல தான் வாழ்க்கையில் உழைப்பு மற்றும் கல்வியை பயன்படுத்தி நாம் மேலே வர வேண்டும் என்றார். மேலும் இந்த இல்லத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் தான் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications