ஏங்ங்க.. ஏர்போர்ட் மாதிரி இருக்குங்க! பட்டைய கிளப்புது பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட்! அசந்த திருச்சியன்ஸ்!
திருச்சி: நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இன்று பயன்பாட்டுக்கு வந்தது. ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் வகையிலும், நாள்தோறும் 1250 நகரப் பேருந்துகள், 1920 வெளியூர் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இன்று பேருந்து நிலையத்தின் சேவையை அமைச்சர் கேஎன் நேரு தொடங்கி வைத்த நிலையில், விமான நிலையத்திற்கு ஈடாக பேருந்து நிலையம் இருப்பதாக ஆச்சரியத்துடன் கூறுகின்றனர் திருச்சி வாசிகள்.
தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் நகருக்குள் மத்திய பேருந்து நிலையம். சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. மத்திய பேருந்து நிலையத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருவதால் புறநகர் பகுதியில் ஒரு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து திருச்சி பஞ்சப்பூரில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் சென்னை கிளாம்பாக்கத்துக்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே ஒன்பதாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை துவக்கி வைத்தார். அதே நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகியும் அங்கு போக்குவரத்து தொடங்கவில்லை. பலர் அங்கு கடைகளை அமைத்திருந்த நிலையில் ஒருவர் கூட வரவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு தொடங்கி வைத்தார்.இதனை அடுத்து மத்திய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டிய வெளியூர் பேருந்துகள் நேரடியாக அங்கு வந்தன. மேலும் உள்ளூர் பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆச்சரியத்துடன் சென்றனர்.
தற்போது பேருந்து நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை அங்கு நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் ஒரு நாளைக்கு 1257 நகரப் பேருந்துகளும், 1929 வெளியூர் பேருந்துகளும் இயக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. தரைத்தளத்தில் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், முதல் தளத்தில் நகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஏசி வசதி செய்யப்பட்ட தரைத்தளம் கொண்ட பேருந்து நிலையம் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் இல்லாமல் நகரும் படிக்கட்டுகள், டிஜிட்டல் வழிகாட்டும் பலகைகள், 50 எல்இடி திரைகள், ஆண்கள், பெண்கள், திருநங்கைகளுக்கு 150-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் அண்டர் கிரவுண்டில் 1500 இருசக்கர வாகனங்கள் தரைத் தளத்தில் 210க்கும் மேற்பட்ட கார்கள், 391 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு 24 மணி நேரமும் உணவு மற்றும் குடிநீர், சிற்றுண்டி, தேநீர் உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் 10 கடைகளும் 12 உணவகங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் பேருந்து சேவை தொடங்கியதை கேள்விப்பட்ட திருச்சி வாசிகள் பேருந்து நிலையத்தை சுற்றிப் பார்த்தனர். நகரம் படிக்கட்டுகள், ஏசி தரைத்தளம், அண்டர் கிரவுண்ட் மற்றும் மேல் தளத்தில் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு விமான நிலையத்தை போல பஞ்சபூர் பேருந்து நிலையம் இருப்பதாக கூறுகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications