‛சவுக்கு சங்கருக்கு போலீஸ் கஸ்டடி’.. நாளை வரை விசாரிக்க அனுமதி! திருச்சி கோர்ட் உத்தரவு
திருச்சி: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா இன்று உத்தரவிட்டார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். பெண் காவலர்கள் பற்றி அவர் அவதூறான சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பான புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கடந்த 4ம் தேதி கைது செய்தது. தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் சவுக்கு சங்கரின் காரில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக தேனி பிசிபட்டி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின.
அதாவது பெண் காவலர்கள் குறித்த அவதூறு கருத்து தொடர்பாக கோவையை தொடர்ந்து சேலம், சென்னை, திருச்சியில் சைபர் கிரைம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் சவுக்கு சங்கருக்கு ஓராண்டு வரை ஜாமீன் கிடைக்காது. அவர் சிறையிலேயே தான் இருக்க வேண்டும்.
இந்நிலையில் தான் திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கு தொடர்பாக சவுக்க சங்கர் நேற்று கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி மகிளா நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது திருச்சிபோலீசார் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தனர். பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தி உத்தரவிடுவதாக நீதிபதி ஜெயப்பிரதா தெரிவித்து இருந்தார். இதையடுத்து இன்று மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா அந்த மனு மீது விசாரணை மேற்கொண்டார். அப்போது சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர், ‛‛சவுக்கு சங்கரை போலீஸ் கஸ்டடியில் வழங்க கூடாது. வழங்கினால் அவர் தாக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி கூடாது'' என வாதிடப்பட்டது.
அதேவேளையில் போலீஸ் சார்பில், ‛‛வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் விசாரிக்க வேண்டும். இதனால் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி வழங்க வேண்டும்'' என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் நாளை மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் ஆர்டர் போட்டார். இந்த உத்தரவால் சவுக்கு சங்கரை திருச்சி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications