இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்க்கும் தொகுதியாக திருச்சி கிழக்கு உருவெடுத்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு காலியாகியுள்ளதால், அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள திமுக சார்பில், போட்டியிட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், இனிகோ இருதயராஜ் இடையே கடும் போட்டி இப்போதே தொடங்கியுள்ளதாம்..

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த முதல்வர் ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Trichy East Bypoll

இதனால் அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. பொதுவாக தமிழக அரசியலில் இடைத்தேர்தல்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஆனால் இந்த முறை சூழல் சற்று மாறுபட்டதாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்

ஏனெனில் தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த காலங்களில் பேசப்பட்ட பணப்பட்டுவாடா அரசியல் இந்த முறை அதே அளவில் இருக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் கட்சிகளின் உண்மையான செல்வாக்கை அளவிடும் தேர்தலாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் மாறக்கூடும். ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை, இந்தத் தொகுதியை எந்த சூழலிலும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

விஜய்

ஏற்கனவே முதல்வர் விஜய் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், மீண்டும் வெற்றிபெறுவது கட்சியின் கவுரவ பிரச்சினையாகவும் பார்க்கப்படுகிறது. தவெக வட்டாரங்களில் கிடைக்கும் தகவலின்படி, முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் வேட்பாளர் வாய்ப்புக்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. "விஜய் பெற்றதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும்" என்ற நம்பிக்கையுடன் அவர் கட்சித் தலைமையிடம் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக

அதேநேரத்தில், திருச்சி மாவட்டச் செயலாளர் கரிகாலனும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற தீவிர முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சாதாரண தொண்டர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் விஜய்யின் அரசியல் பாணி காரணமாக, பல புதிய முகங்களும் சீட் கேட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சித் தொண்டர்களின் மனநிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் திமுக தலைமைக்கு உள்ளது.

இனிகோ இருதயராஜ்

அதற்கான முதல் வாய்ப்பாகவே திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. திமுகவில் தற்போது இரண்டு முக்கிய பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் விஜய்யை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த இனிகோ இருதயராஜ் மீண்டும் களமிறங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். தேர்தலில் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்ததால், இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார்.

அன்பில் மகேஷ்

தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தனது பணிகளை மக்கள் இன்னும் நினைவுகூருவதாகவும் அவர் கூறியுள்ளார். தலைமை வாய்ப்பு வழங்கினால் மீண்டும் போட்டியிடத் தயார் எனவும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் பெயரும் வலுவாக பேசப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் குடும்ப ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு கொண்டவராக பார்க்கப்படும் அவர், வேட்பாளராக களமிறங்கினால் தேர்தல் மேலும் பரபரப்பாக மாறும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

கே.என்.நேரு

மேலும் இந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பை முன்னாள் அமைச்சர் கே.என். நேருவிடம் ஒப்படைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்த சூழலிலும் திருச்சி கிழக்கில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் திமுக செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்த ஒரு வெற்றி கிடைத்தால் மட்டுமே தோல்வியால் சோர்வடைந்துள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உற்சாகம் கிடைக்கும் என்று திமுக தலைமை நம்புவதாக கூறப்படுகிறது.

அதிமுக

அதேபோல் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் அடித்தளத்தையும் இந்த வெற்றி உருவாக்கும் என கருதப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை நிலைமை சற்று வேறுபட்டுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மீண்டும் களமிறங்க விருப்பம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சி உட்கட்சி சிக்கல்களையும் தொடர் தோல்விகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எந்த அணுகுமுறையை எடுக்கப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

திருச்சி கிழக்கு தொகுதி

மொத்தத்தில் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் ஒரு சாதாரண தேர்தலாக இருக்கப் போவதில்லை. ஆளுங்கட்சிக்கு இது செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தல். திமுகவுக்கு இது மீண்டும் எழுச்சி பெறும் வாய்ப்பு. அதிமுகவுக்கு இது தன்னுடைய எதிர்கால அரசியல் நிலையை சோதிக்கும் களம். அதனால் வேட்பாளர் அறிவிப்பு முதல் வாக்குப்பதிவு வரை திருச்சி கிழக்கு தொகுதி தமிழக அரசியலின் 'ஹாட் டாபிக்' ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+