"கல்யாணம் பண்ணிக்கலாம்"ன்னு.. +2 மாணவி கிட்ட சொன்னாராம் அந்த பாஜக நிர்வாகி.. தூக்கிய திருச்சி போலீஸ்
திருச்சி பாஜக நிர்வாகியை போலீசார் போக்சாவில் கைது செய்தனர்
திருச்சி: திருச்சி பாஜக நிர்வாகியை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.. சமீபத்தில்தான், பாஜக நிர்வாகி ஒருவரை போக்சோவில் கைதான நிலையில், மீண்டும் மற்றொரு பாஜக நிர்வாகி போக்சோவில் கைதாகி உள்ளது, பரபரப்பை கூட்டி வருகிறது.
சமீபத்தில், தாய் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் மீது போக்சோ சட்டத்தில் கைதாகி இருந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி.. 56 வயதாகிறது.. இவர் பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வந்தார்.

பாலியல் டார்ச்சர்
இவர் தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் தாய் - மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு, இந்த வழக்கு கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வந்தனர்... அதே நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசாரும், போக்சோ சட்டத்தில் பார்த்தசாரதி மீது இன்னொரு வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்... இதனால் பெரும் பரபரப்பு ஏற்படவும், கட்சியில் இருந்து பார்த்தசாரதி நீக்கப்படுவதாக அறிக்கை ஒன்று வெளியானது..

ஓட்டம் பிடித்தார்
இறுதியில், ஆந்திர மாநிலம் சித்தூரில், பார்த்தசாரதி நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், போலீசார் சித்தூருக்கு விரைந்தனர். ஆனால், போலீசார் வருவதை கேள்விப்பட்டதுமே, பார்த்தசாரதி ஓட்டம் பிடித்தார்... இதையடுத்து கிராம மக்களிடம் பாலியல் விவகாரம் தொடர்பாக போலீசார் எடுத்து சொல்லவும், பொது மக்கள் உதவியுடன் பார்த்தசாரதியை போலீசார் மடக்கி பிடித்தனர்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இப்போது இன்னொரு சம்பவம் இதேபோல நடந்து, இதே போல பாஜக நிர்வாகி ஒருவர் போக்சோவில் கைதாகி உள்ளார்.

திருச்சி வினோத்
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்.. 26 வயதாகிறது.. இவர் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.. திருமணம் செய்வதாக சொல்லி, அவரை ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது... பிறகு ஒருகட்டத்தில் அந்த சிறுமியிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம்.. இதனால், கலங்கி போன அந்த சிறுமி, வினோத்திடம் இதை பற்றி கேட்டதற்கு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் வினோத்.. இதையடுத்து சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்டாகிராம்
இந்த புகாரின் பேரில் திருவரங்கரம் போலீசார் விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர்... இதையடுத்து திருவரங்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.. பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியிருக்கிறார் வினோத்.. அவரை காதலிப்பதாகவும் சொல்லி, கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதி கூறியுள்ளதாக தெரிகிறது. இப்போது, அச்சிறுமியை ஏமாற்றிய நிலையில், சம்பந்தப்பட்ட நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளது, மீண்டும் அதிர்வலையை கட்சிக்குள் உண்டுபண்ணி வருகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications