Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் வரம்பு மீறிப் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை: கொதிக்கும் திருச்சி சிவா

Subscribe to Oneindia Tamil

திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என திருச்சி சிவா எம்பி கொதிப்புடன் தெரிவித்துள்ளார்.

நேற்று நீலகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதி நன்றாக இருந்தால், தான் தலைவராக முடியாது என எண்ணி அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் 2 ஆண்டுகள் வீட்டிலேயே ஸ்டாலின் சிறை வைத்திருந்ததாக பகீர் புகார் தெரிவித்தார்.

Trichy siva says we cant bear CM palanisamy speech about karunanidhi health

மேலும் கருணாநிதியை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தால் குணமாகியிருப்பார் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறினார்.

முதல்வர் பழனிச்சாமியின் இந்த பிரச்சாரத்தால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பேசியதோடு, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தராமல் எடப்பாடி வஞ்சகம் செய்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும் நாகூசாமல் பேசும் எடப்பாடிக்கு தண்டனையாக அவரது ஆட்சியை விட்டு அனுப்ப வேண்டும் என்றும் கூறினார்.

இதனிடையே முதல்வர் பழனிச்சாமியின் பிரச்சாரத்தால் கொதித்து போயிருக்கும் திமுக எம்பி திருச்சி சிவா, கலைஞருக்கு உடல்நலம் குன்றியபோது மிகவும் வெளிப்படையாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், அது குறித்து முதல்வர் பழனிச்சாமி வரம்பு மீறிப் பேசுவதை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.

முதல் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகள் விவரம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+