லிஸ்ட் ரெடி.. அரெஸ்ட் இனி! பைக்கர்களை பதற வைத்த திருச்சி எஸ்பி வருண் குமார் - TTF பண்ணையே இருக்கே
திருச்சி: தீபாவளி என்று பைக்கில் வீலிங் செய்தபடி ராக்கெட் வெடி வெடித்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோரின் பட்டியல் தயாராகி வருவதாக திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை கட்டிக்கொண்டு வீலிங் செய்து அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இளைஞர் அஜய் நேற்று கைது செய்யப்பட்டார். அதேபோல் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பலர் கைதாகி வருகிறார்கள். இது குறித்து திருச்சி மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாநகரில் பொதுமக்களின் உயிருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அஜாக்கிரதையாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் (Wheeling) ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகர காலல் துணை ஆணையர்கள் சாக உகவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களால் சட்டரீதியான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசம் (Wheeling) செய்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஒட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வரும் நபர்கள் கண்காணிக்கபட்டு வந்த நிலையில், கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பஜார் பெரியசாமி டவர் அருகில் டைமன்ட் பஜாரை சேர்ந்த உசேன் பாஷா (வயது 24,) த.பெ. பஷீர் அகமது என்பவர் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டவரை கைது செய்து, வீலிங் செய்ய பயன்படுத்திய வாகனம் கைப்பற்றபட்டது.
அதே போல் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பால்பன்னை to செந்தண்ணீர்புரம் சர்வீஸ் ரோட்டில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட தாராநல்லூரை சேர்ந்த ராஜேஷ் வயது 21, த.பெ.முனியப்பன் என்பவரையும் அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குழுமாயி கரை ரோட்டில் கமலா நிக்கேந்தன் பள்ளி அருகில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட கல்லாங்காட்டை சேர்ந்த அஜய் வயது 24/23 த.பெ சீனிவாசன் என்பவரையும் கைது செய்து, வீலிங் செய்ய பயன்படுத்திய வாகனங்கள் கைப்பற்றபட்டன.
மேற்படி மூன்று நபர்களும் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், ஆபத்தான நிலையில் வாகனம் ஒட்டி சாகசம் (Wheeling) செய்ததற்காக மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்தும், சாகசத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டும், வாகனங்களை பறிமுதல் செய்தும், ஒட்டுனர் உரிமம் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனை குறிப்பிட்டு ட்விட்டர் பயனர் நெப்போலியன் என்பவர், "திருச்சியில் பட்டாசுகளை கட்டிக்கொண்டு வீலிங் செய்து அதனை இன்ஸ்டாவில் இளைஞர்கள் வெளியிட்ட விவகாரம் - திருச்சி மாநகர போலீஸ் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததோடு இது போன்ற இளைஞர்களின் பட்டியலையும் தயாரித்து கைது செய்து வருவது பாரட்டுதலுக்குறியது." என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை ரீட்வீட் செய்து இருக்கும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ், "பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications