ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கல்யாணம்-குழந்தை என செட்டில் ஆகிட்டாங்க..விரக்தியில் தூத்துக்குடி வாலிபர் தற்கொலை
தூத்துக்குடி: நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று புலம்பி வந்த 34 வயது இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொண்டது தூத்துக்குடி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி, குழந்தைகளையும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள் ஆனால் எனக்குத்தான் திருமணமே இன்னும் ஆகவில்லை என்று சொல்லி புலம்பி வந்த இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் பகுதியில் நமச்சிவாயபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் கஜேந்திரன் ( வயது 34) . தனது ஊருக்கு அருகே உள்ள விளாத்திக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு பெற்றோர்கள் திருமணம் முடித்து வைப்பதற்காக பெண் தேடி கொண்டு இருந்தனர். நீண்ட நாட்களாக பெண் தேடியும் கஜேந்திரனுக்கு எந்த ஒரு வரனும் அமையவில்லை எனக்கூறப்படுகிறது. பெற்றோர்களும் தரகர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள் என பல இடங்களிலும் சொல்லி கஜேந்திரனுக்கு முழு மூச்சாக தொடர்ந்து பெண் தேடி வந்து இருக்கின்றனர்.
ஆனாலும் திருமணம் கை கூடதாதால் கஜேந்திரன் மன உளைச்சலில் இருந்தாக சொல்லப்படுகிறது. தன்னுடன் படித்த, தனது வயது ஒத்த பிற நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகளும் ஆகி சந்தோஷமாக இருக்கிறார்கள் ஆனால் எனக்கு மட்டும் இன்னும் திருமணமே ஆகவில்லை என புலம்பியபடி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தனக்கு நெருக்கமான நண்பர்களிடமும் திருமணம் ஆகவில்லை என்ற தனது வேதனையுடன் கூறி வந்தாராம். இந்த சூழலில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென விஷம் குடித்துள்ளார். வீட்டில் மயங்கி கிடந்தவரை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அவரது பெற்றோர்களும் உறவினர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் 34-வயது ஆன கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
60 வயதிலும் ஆசை வரும்.. நடிகர் அமீர்கான் 61 வயதில் 3வது திருமணம்.. யார் இந்த 47 வயது காதலி கவுரி? -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications