அண்ணாமலை நல்லவர்! அவர் இருக்கும் இடம் தான் சரியில்லை! பாஜகவை கலாய்த்த துரை வைகோ!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அண்ணாமலை நல்லவர் தான் என்றும் ஆனால் அவர் இருக்கும் இடம் தான் சரியில்லை எனவும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜக சரியில்லாத இடம் என்பதை தான் அவர் இப்படி கலாய்த்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் ராகுல்: தங்களுக்கு ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதையும் அவர் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து எல்லா மாவட்டங்களுக்கும் பயணித்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களது இல்ல நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டு வருகிறார் துரை வைகோ.

Durai Vaiko said that Annamalai is a good person but his place is not right

பாஜக மீது சாடல்: அந்த வகையில் தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற துரை வைகோ, போகிற போக்கில் பாஜகவை மோசமாக கலாய்த்துள்ளார். அண்ணாமலை நல்லவரு தான் ஆனால் அவர் இருக்கும் இடம் தான் சரியில்லை என்று பாஜகவை எந்தளவுக்கு சிறுமைப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சிறுமைப்படுத்தியுள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் மதுரையில் பேட்டியளித்த துரை வைகோ, அண்ணாமலை தரம் தாழ்ந்து நடந்துக்கொள்வதாக விமர்சித்திருந்தார்.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம்: இந்நிலையில் இன்று இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல் இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது பற்றி இன்னும் யாரும் வாய் திறக்காத நிலையில், துணிச்சலாக தங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்பதையும் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக பார்க்கப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறுவது உறுதி என்றும் இந்தியா கூட்டணி அதன் பணிகளை ஆக்டிவாக தான் செய்து கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Durai Vaiko said that Annamalai is a good person but his place is not right

கருணாஸை தொடர்ந்து: எந்த அமைப்பில் வேண்டுமானாலும் இருங்கள் பாஜகவில் மட்டும் இருக்க வேண்டாம் என கடந்த வாரம் கருணாஸ் பேசியது வைரலாகிய நிலையில், பாஜக சரியில்லாத இடம் என துரை வைகோவும் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+