வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு தாருங்கள்… கனிமொழி பிரச்சாரம்
திருச்செந்தூர்: திமுக வாக்குறுதி அளித்தால் அதை நிச்சயம் நிறைவேற்றும் என்று தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சியில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.

உங்களுக்கெல்லாம் தெரியும் திமுக ஆட்சியில் விவசாய கடன்கள் எப்படி தள்ளுபடி செய்யப்பட்டதோ அதேபோன்று, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்
100 நாள் வேலை திட்டம் என்பது 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும், கல்வி கடன் எல்லாம் ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு சுய தொழில் தொடங்க ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இவை அனைத்தையும் செய்வதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் மக்கள் தவறு செய்தால் அதுவே இந்தியாவின் கடைசி தேர்தலாக அமைந்து விடும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications