திமுக கூட்டணி ஓவர் லக்கேஜ்.. விஜயை பார்த்து பயந்துவிட்டனர்.. கடம்பூர் ராஜூ கடும் விமர்சனம்
தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் கடந்த முறை கூட்டணி வகித்த தேமுதிக உள்ளிட்டோரை கூட அவர்களால் தக்க வைக்க முடியவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், விஜய்யை பார்த்து பயந்து திமுக ஓவர் லக்கேஜாக கூட்டணியை சேர்த்து வருகிறார்கள் என்று கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்து பேசியது மட்டுமல்ல, அவர் திமுகவில் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அது அவரின் தனிப்பட்ட விருப்பம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்கிறார். முதலில் இதை அவரின் மனசாட்சி ஏற்குமா [Kadambur Raju].

ஓபிஎஸ் மனசாட்சி
ஓபிஎஸ் மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா அவரை மன்னிக்காது. அதற்காக அவருக்கு நிச்சயம் தண்டனை உண்டு. தன்னுடைய அரசியல் லாபத்திற்காக அவர் போகிறார் என்றால் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அவர் முதல்முறையாக நகர்மன்ற உறுப்பினராக இருந்தது தொடங்கி நாட்டிற்கே 3 முறை முதலமைச்சராக இருந்தது வரை அடையாளம் தந்தது அதிமுக.
வாய்ப்பளித்த ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 1989 ஆம் ஆண்டு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அதையெல்லாம் மறந்து அவருக்கு அம்மா பல அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை வழங்கினார். இந்திய துணை கண்டத்திலேயே, சாதாரண நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர், அதுவும் கட்சி தலைமையை எதிர்த்தவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்திருக்க மாட்டார்கள்.
விஜயைப் பார்த்து பயமில்லை
தான் வகித்த முதலமைச்சர் பதவியையே அவருக்கு வழங்கியவர் ஜெயலலிதா. அதை எல்லாம் நினைத்து பார்த்து விசுவாசமாக இருந்திருந்தால் இன்றைக்கு ஓபிஎஸ் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க மாட்டார். விஜய் உள்ளிட்ட எந்தக் கட்சியாலும் அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது. கடந்த காலங்களில் இப்படி கட்சி தொடங்கியவர்கள் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வங்கியை தான் பிடிக்க முடிந்தது.
அப்போது கூட யாராலும் அதிமுக வாக்கு வங்கி பாதிக்கவில்லை. எங்கள் வாக்கு வங்கி நிரந்தரமானது. இரட்டை இலை சின்னத்தின் மூலம் ஒரு இலையை எம்ஜிஆராகவும், இன்னொரு இலையை ஜெயலலிதாவாகவும் பார்ப்பார்கள். அவர்கள் வேறு எந்த சின்னத்திற்கும் வாக்களிக்க மாட்டார்கள். விஜயை பார்த்து எங்களுக்கு பயமில்லை.
ஓவர் லக்கேஜ்
திமுக தான் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அதற்காக தான் இருக்கிற கட்சி, போன கட்சி, வந்த கட்சி எல்லோரும் கூட்டணியில் இணைத்து ஓவர் லக்கேஜ் சேர்த்துள்ளனர். எல்லாரையும் உள்ளிழுத்து போடுகிறார்கள். திமுக இன்று ஓவர் லக்கேஜ் ஆகிவிட்டது. அந்த வண்டி ஓடாது. கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து இருக்காது என்றார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications