நோட்டாவை விட கூடுதல் ஓட்டு வாங்கி காட்டுங்க பார்ப்போம்.. தமிழிசையை கலாய்க்கும் கடம்பூர் ராஜு
தமிழகத்தில் தாமரை மலராது என்று தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
கோவில்பட்டி: "வர போகிற தேர்தலிலாவது நோட்டாவைவிட கொஞ்சம் அதிக ஓட்டுகள் வாங்குவது பாஜகவுக்கு நல்லது" என்று தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி தந்துள்ளார்.
அதிமுக-பாஜக கட்சிகள் ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். "தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி நடக்கவில்லை என்றும், இதனால் மலர போவது தாமரைதான் என்றும் அதிமுக அரசுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசும்போது பதிலடி தந்துள்ளார். அப்போது அவர் சொன்னதாவது: "தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி நடக்கிறதா, இல்லையா என்பதை மக்கள்தான் கூறவேண்டும்.
தமிழிசை போன்றவர்கள் எங்களுக்கு சர்ட்டிபிகேட் கொடுக்க தேவையில்லை. ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.
வருகிற தேர்தலிலாவது நோட்டாவைவிட அதிக ஓடுடுகள் வாங்குவது பாஜகவுக்கு நல்லது. அதிமுகவுக்கு அதிக வாக்கு வங்கிகள் இருப்பது மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் தாமரை மலரப் போவது இல்லை. அதிமுக ஆட்சிதான் தொடரும்" என்று தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி தந்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications