"போலீஸ் முத்துராஜ்".. தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி.. தேடும் படலம் தீவிரம்!
தேடப்படும் குற்றவாளியாக போலீஸ் முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.. இவர் தலைமறைவான நிலையில் தேடப்படும் நபராக தற்போது சிபிசிஐடி அறிவித்துள்ளது.
Recommended Video
சாத்தான்குளம் இரட்டை மரண விவகாரத்தில், நேற்று ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. அவர்களை வருகின்ற 16-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் போலீஸ் முத்துராஜை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை.

கோவில்பட்டி பூரணம்மாள் காலனியில் இவரது சொந்தக்காரர் வீடு உள்ளது.. அதனால் நேற்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள போலீசாரின் உறவினர் வீடுகளுக்கும் சென்று முத்துராஜ் குறித்து விசாரணையை நடத்தினர்... முத்துராஜின் உறவினரை விளாத்திகுளம் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.. கயத்தாறு சுங்கச்சாவடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்தான், தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.. விரைவில் முத்துராஜை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications