தாலியின் ஈரம் கூட காய்ந்திருக்காது.. திருச்செந்தூரில் கல்யாணம் ஆன 3 நாளில் புதுமண தம்பதிக்கு துயரம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கல்யாணம் ஆகி 3 நாளில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்து உள்ளது மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரம். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கராஜ் என்பவருடைய மகன் பழனிகுமார் (வயது 30), கேரள மாநிலத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்திருக்கிறார்,

பழனிகுமாருக்கும் தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த ராமய்யா மகள் 21 வயதாகும் முத்துமாரிக்கும் கடந்த 10-ந்தேதி கல்யாணம் நடந்தது. பின்னர் சுப்பிரமணியபுரத்தில் புதுமண தம்பதி வசித்து வந்தார்கள்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மதியம் பழனிகுமார்-முத்துமாரி வீட்டில் மதியம் சாப்பிட்டுள்ளார்கள். பின்னர் அவர்கள் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்கள். தொடர்ந்து மாலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பழனிகுமாரின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது.
இதனால் புதுமண தம்பதியை அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். மேலும் உறவினர்களின் வீடுகளுக்கு புதுமண தம்பதி சென்றனரா? அல்லது கேரளாவுக்கு மனைவியை பழனிகுமார் அழைத்து சென்றாரா? என பலரிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையில் மேல ஆத்தூரில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு இருந்த நீர்த்தேக்கத்தில் 2 பேர் பிணமாக மிதந்துள்ளனர் இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நேரில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரில் பிணமாக மிதந்த பழனிகுமார் மற்றும் முத்துமாரியின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதார்கள்.
இறந்த புதுமண தம்பதியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரித்த போது, நீர்த்தேக்கத்தின் கரையில் அமர்ந்து புதுமண தம்பதி பேசிக் கொண்டிருந்தபோது, முத்துமாரி தண்ணீரில் தவறி விழுந்ததால், அவரை காப்பாற்ற பழனிகுமார் முயன்றதில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது,. தாலியின் ஈரம் கூட காயும் முன்பே புதுமண தம்பதி உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications