எஸ்ஐ வேலை காவல்துறைக்கு இதயம் போன்றது.. இசக்கி ராஜா பேசிய பழைய வீடியோ

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: எனக்கே சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு போகும் முன்பு, ரோட்டில் தம் அடிப்பவர்கள், சரக்கு அடிப்பவர்களை கண்டால் கோபம் தான் வரும்.. தட்டிக்கேட்டால் நம்மிடம் பேசுவான்.. போலீஸ் வேலையில் இருந்தால் நம்மை கேட்கமாட்டான்.. என்ன ஒன்று என்றால், சின்ன சின்ன விஷயங்களை தட்டிக் கேட்லாம்.. நிறைய பேருக்கு உதவி செய்யலாம்.. சப் இன்ஸ்பெக்டர் வேலை என்பது இதயம் போன்றது. என எஸ்ஐ இசக்கி ராஜா எஸ்ஐ பணி தொடர்பாக பேசிய பழைய வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

எஸ்ஐ இசக்கி ராஜா யார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல்நிலையத்தில் இசக்கி ராஜா பணிபுரிந்த போது, ரவுடி ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நானும் ரவுடிதான்; நேருக்கு நேர் மோதி பார்ப்போமா" என பேசி அந்த ஆடியோவை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ தான் எஸ்ஐ இசக்கி ராஜாவை பிரபலமாக்கியது. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் நடந்த ஒரு பிரச்சனையால் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதுபற்றி முதலில் பார்ப்போம்.

The Sub-Inspector is like the heart of the Police Department says SI Isakki Raja

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மருதும்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் சேட் (75). இவருக்கு அருள் இசக்கி ராஜ் (52), சிவ பொன்ராஜ் (44), மணிகண்டன் (33) என 3 மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். அதில், மணிகண்டன் மட்டும் தந்தையுடன் இணைந்து விவசாயம் மற்றும் பனைத் தொழில் செய்து வருகிறார்.

இவர்களுக்கு மருதம்புத்தூர் கிராமத்தில் சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நெல் விவசாயம் செய்து வருகிறார்கள். இதுதவிர 4 பனை மரங்களும் உள்ளன. அதில் கிடைக்கும் பதநீரை வைத்து கருப்பட்டி காய்ச்சுவது, பதநீர் குடிப்பது என சொந்த தேவைக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறார்களாம் இந்த நிலையில்தான், மணிகண்டன் அவரது தோட்டத்தில் உள்ள பனைமரத்தில் கள் இறக்குவதாக ஆலங்குளம் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன் அடிப்படையில், ஏப்.7 ஆம் தேதி ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, இரண்டு போலீசாருடன் மணிகண்டனின் தோட்டத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு யாரும் இல்லாததால், மணிகண்டனை செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக தோட்டத்திற்கு வருமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. அதைக் கேட்ட மணிகண்டனும் தோட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

போலீசார் மணிகண்டனை அழைத்து செல்வதை கண்ட அண்ணன் சிவன் பொன்ராஜ், தனது 2 குழந்தைகளுடன் தோட்டத்திற்கு சென்றுவிட்டாராம். (மும்பையில் உள்ள மணிகண்டனின் சகோதரர் சிவன் பொன்ராஜ் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார்) அதை பார்த்த தந்தை பெருமாள் சேட்டும் பின்னால் சென்றுள்ளார்.

இந்நிலையில், மணிகண்டனுக்கும், இசக்கி ராஜாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்களாம். அதில் எஸ்.ஐ. இசக்கி ராஜா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மணிகண்டனை 4 முறை சுட்டிருக்கிறார்.

அப்போது இரண்டு குண்டுகள் மணிகண்டனின் இரு கால்களிலும் பாய்ந்தன. மேலும், அந்த சண்டையில் இசக்கி ராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. தகவலறந்து விரைந்து வந்த சக போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி வெளியாகி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அத்துடன் சாதாரண பனைத் தொழிலாளியை சுட்டுப்பிடிக்கும் அளவுக்கு என்ன அவசியம் எழுந்தது. இதையடுத்து இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள் ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே அன்று இரவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சிவ பொன்ராஜின் 17 வயது மகள் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீசார் எஸ்ஐ இசக்கி ராஜா உட்பட காவலர் 3 பேர் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். போராட்டத்தில் விளைவாக, நேற்று இரவு இசக்கி ராஜாவை நெல்லை சரக டிஐஜி சரவணன் சஸ்பெண்ட செய்தார்.

இந்நிலையில் இசக்கி ராஜா எஸ்ஐ பணி தொடர்பாக பேசிய பழைய வீடியோவில், சமுதாயத்தில் நிறைய விஷயங்களில் நடக்கும் தவறுகளை என்ன செய்யலாம் என்ற யோசனையில் தான் இந்த பணியினை தேர்வு செய்தேன்..

யாராவது பஸ் ஸ்டாண்டில் நின்று தம் அடித்தால் கூட நமக்கு இரிட்டேட் ஆக இருக்கும். பப்ளிக் பிளேஸில் எத்தனையே பேருக்கு இரிட்டேட் ஆக இருக்கும். எனக்கே சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு போகும் முன்பு, ரோட்டில் தம் அடிப்பவர்கள், சரக்கு அடிப்பவர்களை கண்டால் கோபம் தான் வரும்.. தட்டிக்கேட்டால் நம்மிடம் பேசுவான்.. போலீஸ் வேலையில் இருந்தால் நம்மை கேட்கமாட்டான்.. என்ன ஒன்று என்றால், சின்ன சின்ன விஷயங்களை தட்டிக் கேட்லாம்.. நிறைய பேருக்கு உதவி செய்யலாம்.. சப் இன்ஸ்பெக்டர் வேலை என்பது இதயம் போன்றது. எல்லாருக்கு உதவ வேண்டும். என் கட்டுப்பாட்டில் 100 கிராமம் இருக்கிறது என்றால் 100 கிராமத்திற்கு என்ன பண்ணலாம் என்று யோசிப்பேன்" என்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்ஐ இசக்கி ராஜா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+