For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாஜி ஐஏஎஸ் அதிகாரி வீட்டை போதை புகையிலை குடோனாக மாற்றிய பலே கும்பல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி வீட்டில் 36 லட்ச ரூபாய் மதிப்புடைய புகையிலை பொருட்கள் பறிமுதல்-வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டடம் திருவட்டார் அருகே செறுகோல் பகுதியில் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி சேவியர் ராஜ் என்பவர் வீட்டில் 36 லட்ச ரூபாய் மதிப்புடைய தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வீட்டை வாடகைக்கு எடுத்து போதை புகையிலையை ஸ்டாக் வைத்து சப்ளை செய்து வந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    two member gang arrested for stocking gutka and other banned materials

    கன்னியாகுமரி மாவட்டடம் திக்குறிச்சி பகுதியில் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபடும் போது அதே வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் போன்ற போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடிக்க பட்டு வாகனத்தில் இருந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி

    அதில் செறுகோல் பகுதியில் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி சேவியர் ராஜ் என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து ஏ.எம்.எஸ் ஏஜென்சி என்ற பெயரில் மெத்தை குடோன் வைத்திருப்பதாக கூறி பான் மசாலா , குட்கா போன்ற போதை பொருட்களை வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

    two member gang arrested for stocking gutka and other banned materials

    இந்த நிலையில் இன்று தக்கலை டி.எஸ்.பி பால கிருஷ்ணன் தலைமையில் போலிசார் நடத்திய சோதனையின் போது, மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 36 லட்ச ரூபாய் மதிப்புடைய போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் ரெசித் மற்றும் கம்சா ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Kanyakumari police have arrested two member gang for stocking Gutka and other banned materials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X