ராணிப்பேட்டை அருகே லோடு வேன் ரேஸில் 8 இளைஞர்கள்.. சுவற்றில் வேன் மோதி 4 பேர் பலி
ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மினி லோடு வேனில் ரேஸ் செல்ல முயன்றபோது வேன் சுவரில் மோதியதில் விபத்தில் சிக்கியதில் 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ளது ஆஜிப்பேட்டை. இந்த பகுதியைச் சேர்ந்த 8 இளைஞர்கள் இரவு நேரத்தில் லோடு வேனில் ரேஸ் செல்ல முயன்றனர். அதிவேகமாக சென்ற போது இவர்களது மினி வேன் ஆஜிப்பேட்டை சாலையில் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து சாலையின் அருகே இருந்த சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆற்காடு போலீஸார் சென்றனர். அங்கு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் துபையல், சையது, அலீம், கலிமுல்லா உள்ளிட்ட 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 24 வயது நியால் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு சக்கர வாகனத்தில்தான் ரேஸ் ரேஸ் என கூறி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள் என்றால் லோடு வேனில் விளையாட்டு என்ற பெயரில் வினையை தேடிக் கொண்டனர். ஒரே பகுதியைச் சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications