என்னங்க இது.. இப்படி சுருட்டி போடுது.. வேலூரில் புயலா? கனமழைக்கு நடுவே வெதர்மேன் வெளியிட்ட வீடியோ
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் வெயில் கொளுத்து எடுத்த நிலையில் மாலையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் தான் வேலூரில் புயல் வீசியது போல் காற்று அதிதீவிரமாக இருந்தது பற்றி முக்கிய தகவல் ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காலம் கடந்த மாதம் முடிந்தாலும் இன்னும் வெப்பம் குறையவில்லை. மதிய வேளையில் வெயில் மண்டையை பிளந்து வருகிறது. அதேவேளையில் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மாலை வேளைகளில் மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் இன்று வழக்கம்போல் மதிய வேளையில் பல மாவட்டங்களில் வெயில் கோரத்தாண்டவம் ஆடியது. அதன்பிறகு மாலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இதமான காற்று வீசியது. அதோடு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்தது.
குறிப்பாக கூற வேண்டும் என்றால் வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் வெயில் வதைத்து எடுத்தது. ஆனால் மாலையில் மாவட்டத்தின் பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் வேலூர் சத்துவாச்சாரி, கலெக்டர் அலுவலகம், வள்ளலார் சர்க்கிள், கிரீன் சர்க்கிள், புதிய பேருந்து நிலையம், காட்பாடி, பாகாயம், விருபாட்சிபுரம் உள்பட பல இடங்களில் சூறைக்காற்றுடன் இடியுடன் கூடிய சுமார் 1 மணிநேரம் வரை கனமழை கொட்டித்தீர்த்தது.
வேலூரில் வீசிய பேய்க்காற்றால் மக்கள் பீதியடைந்தனர். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் முறிந்து விழுந்த மரக்கிளைகளால் கார்களும் சேதமடைந்தன. இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேலூரில் பெய்த மழை மற்றும் அங்கு வீசிய சூறைக்காற்று பற்றி முக்கிய தகவலை கூறியுள்ளார்.
மேலும் அவர் வீடியோ ஒன்றையும் அதில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில் உயரமாக அணிவகுத்து இருக்கும் கட்டடங்கள் தெரிகின்றன. சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் நிலையில் மரங்கள் வேகமாக அசைகின்றன. மரத்தில் உள்ள பச்சை இலைகள் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உதிர்ந்து மழையோடு பறக்கின்றன.
VIT Vellore. Vellore saw one of the intense convective storms of the season. 55 mm was recorded till 5.30 pm in Vellore observatory. pic.twitter.com/fsfBHAWxen
— Tamil Nadu Weatherman (@praddy06) June 9, 2023
இந்த ட்விட்டர் பதிவில் தமிழ்நாடு வெதர்மேன், ‛‛வேலூரில் இந்த பருவத்துக்கான தீவிர வெப்பசலனத்தின் புயல்களில் இதுவும் ஒன்று. வேலூர் கண்காணிப்பு மையத்தின் கணக்கீட்டின்படி இன்று மாலை 5.30 மணி வரை மட்டும் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது'' என தெரிவித்துள்ளார். அதாவது வழக்கத்தை விட வேலூரில் இன்று காற்று வேகமாக வீசியதையும், இன்று பதிவான மழையையும் தான் தமிழ்நாடு வெதர்மேன் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications