வேலூரில் போட்ட முதல் ப்ளான்.. எல்லப்பனும், தங்க பிரேஸ்லெட்டும்.. ஆர்ம்ஸ்ட்ராங்கை வீழ்த்திய "கோடாரி"
வேலூர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தினம் தினம் புதுபுது தகவல்கள் வெளியாகி, அதிர்ச்சியை தந்து வருகின்றன. இந்த வழக்கின் விசாரணையை போலீசாரும் தீவிரமாக முன்னெடுத்து வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்... ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக காரணம் சொல்லப்படுகிறது.

கொடூர கொலை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பொன்னை பாலு, உட்பட 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகிறார்கள்.. அந்தவகையில், ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானதையடுத்து, அவரை தீவிரமாக தேடவந்தனர்.
நேற்றிரவு புளியந்தோப்பு அஞ்சலை கைது செய்யப்பட்டார்.. இதையடுத்து, மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்த அஞ்சலை தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கஞ்சா வியாபாரம், கந்துவட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்த அஞ்சலை மீது 10 கேஸ்கள் உள்ளன.. அதேபோல, புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷனிலுள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
வாக்குமூலம்: நேற்றிரவு முதல் போலீசாரின் பிடியிலுள்ள அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தெரிந்தே தான் பண உதவி செய்ததாக அஞ்சலை வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த பணபரிவர்த்தனைகளுக்கு முக்கிய மூளையாக அஞ்சலை செயல்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.. எனவே, அஞ்சலையின் வங்கி கணக்குகளின் விவரங்களை எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல, பாஜகவில் உள்ள ரவுடிகள் பலரை பற்றியும் விலாவரியாக போலீசாரிடம் விவரித்துள்ளாராம் அஞ்சலை.. அந்தவகையில், அஞ்சலை தந்துள்ள வாக்குமூலமானது, பாஜகவினர் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
சிறைவாசிகள்: அஞ்சலையை தொடர்ந்து சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைவாசிகளுக்கு வெளியில் இருந்து பண உதவி, சிறைவாசிகளிடம் இருந்து வெளியில் தகவல்களை சொல்பவராக எல்லப்பன் செயல்பட்டதாக சொல்கிறார்கள். தற்போது இவரிடம் நடத்திய விசாரணையிலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கோடாரி ஒன்றை வாங்கியதும், அதனை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. அந்தவகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமானது, முதலில் வேலூரிலிருந்தே தொடங்கியிருக்கிறது..
சம்போ செந்தில்: வேலூரில் அருள், பொன்னை பாலுவை மூளை சலவை செய்துள்ளார். இதற்காக பாலு, தங்க பிரேஸ்லெட்டை வைத்து ரூ.3.50 லட்சம் பணமாக்கினாராம்.. சம்போ செந்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஹரிஹரனுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்ததுமே, கோடாரி ஒன்றை வாங்கி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அதனை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரமானது, தினம் தினம் மேலும் மேலும் பல அதிர்ச்சியை தந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு குற்றவாளிகளும் சொல்லும் வாக்குமூலங்களை கேட்டு தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.. இந்த கொடூர கொலையில், இன்னும் இதில் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications