பிரதமர் மோடி முன்பு 'பெரிய மீசை' கீழே விழுந்தாரே யார் தெரிகிறதா? 2001 ஜெ.ஆட்சி சம்பவம் தெரியுமா?
வேலூர்: பிரதமர் நரேந்திர மோடி வேலூரில் மேடையில் பிரச்சாரம் செய்துவிட்டு புறப்படும் போது. பெரிய மீசை வைத்திருந்த ஒருவர் தவறி கீழே விழுந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில அவர் யார் என்று பலரும் தேடுகிறார்கள்.. அவர் பெயர் பாண்டுரங்கன்.. ஜெயலலிதா ஆட்சியில் ஒரு காலத்தில் எப்படி இருந்தவர் தெரியுமா? இதை பாருங்கள்.
வேலூரில் பாஜக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் செய்துவிட்டு மேடையை விட்டு மோடி கீழே இறங்க முயன்றார். அப்போது பெரிய மீசை வைத்திருந்த பெரியவர் ஒருவர். பிரதமர் மோடி பக்கத்தில் நின்ற போது, அவர் மீது தெரியாமல் மோதி தவறி கீழே விழுந்தார்.

இதை பார்த்த மேடையில் இருந்தவர்கள், அவரை தூக்கிவிட்டனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் இருந்த பெரியவர் யார் என்று பலரும் தேடினார்கள். இந்நிலையில் அவர் முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன் என்பது தெரிய வந்துள்ளது.
நெட்டிசன்கள் பலரும் அவரை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். அந்த தகவல்களை பற்றி பார்ப்போம்.. 2001-ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த போது அணைக்கட்டு தொகுதியில் வெற்றி பெற்றவர் முதுல்முறையாக அமைச்சர் ஆனவர் பாண்டுரங்கன். அப்போது நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜ்பவன் திறந்தவெளியில் நடைபெற்றது. அந்த சமயத்திர்ல பதவிப்பிரமாணம் வாசிக்க போடியத்தின் முன்பு எம்எல்ஏவாக இருந்த பாண்டுரங்கன் சென்ற போது ஜெயலலிதா அருகே வந்து பவ்யமாக வணக்கம் வைத்ததோடு கைகளை கண்ணத்தில் போட்டுக் கொண்டார்.
கோயிலில் சாமிக்கு கண்ணத்தில் போட்டுக் கொள்வது போல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து பாண்டுரங்கன் போட்டதை பார்த்து அவரை ஆச்சரியத்தோடு பலரும் பார்த்தார்கள். அதன்பிறகு ஜெயலலிதாவை எப்போது பார்த்தாலும் அதே மாதிரி செய்து கொண்டிருந்தார். சில மாதங்களிலேயே அவருடைய பதவி பறிபோய் விட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தீபா கட்சியில் சேர்ந்தார். பிறகு அமமுகவிற்கு போனார்.
அந்த பாண்டுரங்கன் தான் வேலூரில் பிரதமர் நரேந்திர மோடியின் மேடையில் தவறி விழுந்திருக்கிறார். பாண்டுரங்கனின் அடையாளமே அந்த பெரிய மீசைதான். அந்த மீசையை வைத்து அவரை அடையாளம் கண்டுள்ளனர். இந்த தகவலை செய்தியாளர் பரகத்அலி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. பாண்டுரங்கன் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார்.. இவர் 2001 மற்றும் 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில அணைக்கட்டு தொகுதியில் வென்று எம்எல்ஏவாக இருந்தவர். இப்போது அமமுகவில் இருக்கிறார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications