காதலன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி.. காதலியை சீரழித்த கொடுமை.. 3 பேர் கைது.. வேலூர் கோட்டை ஷாக்

வேலூர் கோட்டை பகுதியில் பெண்ணை சீரழித்த 3 பேரில் 2 பேர் கைதானார்கள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் கோட்டையிலேயே வைத்து இளம்பெண்ணை 3 பேர் நாசம் செய்தனர்.. காதலன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி.. உட்கார வைத்து.. அவர் கண் முன்னாலேயே பெண்ணை சீரழித்த 3 பேரையுமே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். எனினும் உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் பாதிக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்!

வேலூரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் கோட்டை.. ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோட்டையை வந்து பார்வையிட்டு போவார்கள்.. உள்ளூர் மக்களும் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து செல்வது வழக்கம். இதில், இளஞ்ஜோடிகளும் அடக்கம்!

ஒருசிலர் காதலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்களும் கோட்டையை சுற்றி உள்ள பூங்கா பகுதிகளில் அரங்கேறும் உண்டு.. பெரும்பாலான இடங்கள் இங்கு புதர்போல மண்டி கிடப்பதால் இளம்ஜோடிகளுக்கு வசதியாக போய்விட்டது.

 வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை

இந்நிலையில்தான், வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. அவருக்கு வயது 24.. அதே கடையில்தான் காட்பாடியை சேர்ந்த ஒரு இளைஞரும் வேலை பார்க்கிறார்.. இவரும் காதலித்து வந்தனர்.. தனிமையில் சந்தித்து பேச நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கோட்டை பகுதிக்கு சென்றார்கள். இங்குள்ள பூங்கா அருகில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

 கும்பல்

கும்பல்

9.30 மணி என்றாலும், நகரின் மையப்பகுதி என்பதால், மெயின்ரோடு அருகே உள்ளதாலும் பொதுமக்கள் நடமாட்டம் எப்பவுமே இங்கு அதிகமாக இருக்கும். காதலர்கள் பேசி கொண்டிருப்பதை 3 பேர் கும்பல் நோட்டமிட்டு கொண்டே இருந்தது.. பிறகு இளம்பெண்ணிடம் நெருங்கி, அவரது கையை பிடித்து தரதரவென இழுத்தது.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலன், அவர்களிடம் பெண்ணை மீட்க போராடினார்.. ஆனால் அவரையும் அந்த கும்பல் அடித்து உத்தது.. பின்னர் திடீரென பாக்கெட்டில் இருந்து பெரிய கத்தி ஒன்றை எடுத்து, காதலனின் கழுத்தில் வைத்து.. மிரட்டி... உட்கார வைத்தனர்.

 காதலன்

காதலன்

இளம்பெண்ணிடமிருந்து கம்மல், செல்போனை பறித்து கொண்டு, 3 பேரும் மாறி மாறி சீரழித்துள்ளனர்.. இளம்பெண்ணோ கத்தி கூச்சலிட்டு கொண்டே இருக்கவும் 3 பேருமே தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து செய்வதறியாது தவித்த காதலன், வேலூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் வந்து இளம்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 ரத்த மாதிரிகள்

ரத்த மாதிரிகள்

இது சம்பந்தமான விசாரணையை போலீசார் உடனடியாக ஆரம்பித்தனர். பின்னர் காதலனை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று, 3 மர்ம ஆசாமிகள் எந்த வழியாக வந்து, தப்பி சென்றனர் என விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் சிதறி கிடந்த ரத்த மாதிரிகளையும், குற்றவாளிகள் வீசி சென்ற பொருட்களையும் சேகரித்தனர்.

 சிசிடிவி கேமிராக்கள்

சிசிடிவி கேமிராக்கள்

அண்ணா சாலையில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, 3 பேரின் அடையாளங்களை கண்டுபிடித்தனர்.. 3 பேருமே கஸ்பா வசந்தபுரம் பகதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.. எடுத்த எடுப்பிலேயே 3 பேரில் அஜித் என்பவரை நேற்று கைது செய்தனர்.. தலைமறைவாக உள்ள மற்ற 2 பேர் பற்றின விவரங்களை, பிடிபட்டவரிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர்.

 ஒருவர் தலைமறைவு

ஒருவர் தலைமறைவு

இதையடுத்து, நேற்றிரவே மற்றொருவரும் சிக்கினார்.. அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.. இன்னொருத்தர் மட்டும் இன்னமும் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் பணியும் தீவிரமானது... அவருக்கு வயசு 40 ஆகிறதாம்.. கல்யாணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. அவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் இன்று சிக்கினார். அஜித், சக்தி, அடைமணி ஆகிய இந்த 3 பேரிடமும் விசாரணை தொடர்கிறது.

 கோரிக்கை

கோரிக்கை

இந்த பூங்காவில் லைட்டுகள் கூட இல்லை என்கிறார்கள்.. மேலும் இந்த பகுதியில் மாலை நேரங்களில் வாக்கிங் செல்பவர்களிடம் செல்போன், பணம் பறிப்பது, அங்கேயே உட்கார்ந்து தண்ணி அடிப்பது போன்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது... அதனால்தான், போலீசார் இங்கு பகல் நேரங்களில் விழிப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். எனினும் இரவு நேரத்தில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

எந்நேரமும் பொதுமக்கள் நடமாட்டத்துடன்... வேலூரின் மையப்பகுதியில்... வரலாற்று புகழ்வாய்ந்த கோட்டை பகுதியிலேயே... உள்ளூர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மாவட்ட மக்கள் மீளவே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+