வேலூரில் ஆச்சரியம்.. அரண்ட பொய்கை.. எப்ப பார்த்தாலும் "பால்" கொட்டுதாமே.. "தெய்வீகம்?".. மேட்டரே வேற
வேலூர்: நம்பவே முடியாத அளவுக்கு ஒரு ஆச்சரிய சம்பவம் ஒன்று வேலூரில் நடந்து கொண்டிருக்கிறது.. இதை பார்த்து அந்த பசுமாட்டு ஓனர் நெகிழ்ந்து போயுள்ளார். என்ன நடந்தது?
சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் ஒரு விநோத சம்பவம் நடந்தது.. அங்குள்ள திருமானிக்குழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.. பிறகு, திடீரென அந்த வேலை பிடிக்காமல், தூக்கி எறிந்துவிட்டார்.
தானாகவே பால்: சொந்த கிராமத்திற்கே வந்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.. ஆடு, மாடு, கோழிகளையும் வளர்த்து வருகிறார்... கால்நடைகளிடமிருந்து கழிவுகளை பெற்று நிலத்தில் அவைகளை உரமாக்கி வருகிறார்.. ஒருநாள், இவர் வைத்திருக்கும் பசுக்களில் ஒன்று, கன்று ஒன்றை ஈன்றிருக்கிறது.. அன்றிலிருந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பாலை தருகிறதாம்.. எப்படி தெரியுமா? பாத்திரத்தை அந்த பசுமாட்டின் மடியில் கொண்டு சென்றாலே தானாகவே பாத்திரத்தில் பால் நிரம்பிவிடுமாம்..

கன்றுக்கும் தேவையான பாலை கொடுத்தாலும், பாத்திரத்தை காண்பித்தாலே தானாக பால் கொடுக்கும் இந்த அதிசய பசுமாட்டை அக்கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றதாக, அப்போது செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டன. இதுபோலவே, ஒரு சம்பவம் திண்டுக்கல்லிலும் நடந்தது. அந்த விவசாயி பெயர் பெருமாள். இவர், இவர் சிறுவயது முதல் ஒரு கன்றுகுட்டியை வாங்கி வளர்த்து வருகிறார்.. அந்த கன்றுக்குட்டி இப்போது வளர்ந்து, தெய்வீக தன்மையுடன் காணப்படுகிறதாம்..
சினை ஊசி: இந்த பசுமாடு, எந்நேரமும் பால் தருகிறதாம்.. இத்தனைக்கும் பல மாதங்களாக எவ்வித கன்றும் ஈன்றாமல், சினை ஊசி போடாமலும், 24 மணிநேரமும் அந்த பசு பால் தந்தவண்ணம் உள்ளதாக சொல்கிறார்கள்.. எந்தநேரம் கறந்தாலும் பால் வருவதால், அந்த பகுதி மக்களும் இந்த பசுவை ஆச்சரியத்துடன் பார்த்து, வணங்கியும் வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், உடனே இந்த பசுமாட்டிடம் ஓடிச்செல்கிறார்களாம்.
அந்த பசுவுக்கு புல்கட்டு, கீரை, தீவனங்களை கொடுத்து, அதன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வருகின்றனர்... அங்கு வரும் பொதுமக்களுக்கு காய்ச்சி குடிப்பதற்கு பெருமாள் கொடுத்து வருகிறாராம்..
அமோக ருசி: அந்த பாலினை அருந்தும் பொதுமக்களும், அமிர்தம்போல் வித்தியாசமான சுவையில் இருக்கிறதாம்.. இந்த பசுவிடம், எந்த கோரிக்கை வைத்தாலும், அது உடனுக்குடன் நிறைவேறி வருவதால், தெய்வீக தன்மை கொண்ட அந்த பசுவை காண பல்வேறு ஊர்களில் இருந்து திரண்டு வந்து வழிபட்டு செல்வதாக, செய்திகளும் அப்போது பரபரத்தன.
இதோ வேலூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. வேலூர் அருகே பொய்கை என்ற பகுதி உள்ளது.. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருவது வழக்கம்.. அப்படித்தான், நேற்றும் சந்தை கூடியுள்ளது.. விவசாயி ஒருவர் மாட்டுச்சந்தைக்கு, பசுவுடன் வந்திருந்தார்.. அப்போது அந்த மாட்டின் மடியில் இருந்து பால் தானாக வழிந்து கொண்டேயிருந்திருக்கிறது.. இதை பார்த்த பலரும், தெய்வீக பசுமாடு என்று சொல்லிக்கொண்டே, அந்த மாட்டை ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
டேப் பசை: பின்னர் அந்த பசுமாட்டின் உரிமையாளர், மடி காம்பின் நுனியில் பசை வைத்து ஒட்டியிருக்கிறார்.. அப்போதும் பசு தானாகவே பால் சுரக்கிறதாம்.. இதனை நிறுத்த முடியவில்லை என்கிறார்கள்.. இதனால் டேப் வடிவிலான பசையை வைத்து ஒட்டி வருவதாக சொல்கிறார்கள்..
ஆனால், இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. சில மாட்டுக்கு இயற்கையாகவே அதிகப்படியாக பால் சுரக்குமாம்.. அந்த பால் மடியில் இருந்து தானாக வெளியேறுவது இயல்பானதே..
ஆனால் அந்த மாட்டை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும்போது மடியின் அளவை பொருத்துதான், வியாபாரிகள் பசுமாட்டை விலைக்கு வாங்குவார்கள்... அதனால், மடியின் அளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, மடியில் இருந்து பால் வழிவதை தடுக்க பசை மூலம் ஒட்டியிருப்பார்கள்.. ஆனால், இப்படியெல்லாம் செய்வது கொடுமையான விஷயம்... இதை பசுமாட்டு ஓனர்கள் செய்யக்கூடாது என்றும் கோரிக்கைகள் எழ துவங்கி உள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications