"நான் கன்னி பொண்ணு".. கல்யாணமாகி குழந்தையும் பெற்று.. இளைஞரை ஏமாற்றி... பலே லாவண்யா!
2 வயது குழந்தையை தரையில் அடித்தே கொலை செய்த நபரை கைது செய்துள்ளனர்
வேலூர்: "கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு" என்றே நம்ப வைத்துள்ளார் லாவண்யா.. கல்யாணம் ஆகி, ஒரு பிள்ளையையும் பெற்று, வேறு ஒரு இளைஞரையும் ஏமாற்றி.. பெற்ற குழந்தையை கொன்றே விட்டார்... இந்த சம்பவம் வேலூரை வெலவலக்க செய்துள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியை பகுதியில் வசித்து வருபவர் லாவண்யா.. இவருக்கு 20 வயதாகிறது.. ஜோலார்பேட்டையை சேர்ந்த சிவசக்திவேல் என்பவரை காதலித்து கல்யாணம் செய்தார்.. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.. கலைரஞ்சனி என்று பெயர் .. சிவசக்திவேல் வயது 21.

இந்நிலையில், லாவண்யாவை சிவசக்திவேலுக்கு பிடிக்கவில்லை.. அதனால் அவரை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை லவ் பண்ண ஆரம்பித்தார்.. அந்த பெண்ணுடன் தனியாக குடும்பமும் நடத்தி வருகிறார்.
இதை பார்த்ததும் லாவண்யாவுக்கு கோபம் அதிகமாக குழந்தையை தூக்கி கொண்டு கே.வி.குப்பத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. அங்கு ஒரு இடத்தில் கட்டிட வேலைக்கும் போனார்.. அந்த இடத்தில் பழக்கமானவர்தான் பிரவீன்குமார்.. இவருக்கும் 21 வயசுதான்.. பிரவீன்குமாருக்கு கல்யாணம் ஆகவில்லை.. இதனால் லாவண்யாவும் தனக்கு கல்யாணம் ஆகவில்லை, "சிங்கிள்" என்று சொல்லி பழகி வந்துள்ளார்.
இதை நம்பிய பிரவீன்குமார், லாவண்யாவை ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார்.. அந்த குழந்தை யாருடையது என்றுகூட கேட்காமல் பிரவீன்குமார் அந்த வீட்டிலேயே குடும்பமும் நடத்த ஆரம்பித்தார்.. ஒருமுறை அந்த குழந்தை யாருடையது என்று கேட்டதற்கு தன்னுடைய அக்கா மகள் என்று சமாளித்துள்ளார் கலைரஞ்சனி.
இந்நிலையில், 17-ந்தேதி இரவு குழந்தை கலைரஞ்சனி திடீரென இறந்துவிட்டாள்.. இது சம்பந்தமாக போலீசாருக்கு புகார் சென்றதும், விசாரணையும் ஆரம்பமானது.. முதல் விசாரணையே லாவண்யாதான்.. அவரை தொடர்ந்து பிரவீன்குமார், அவரது தந்தை வெங்கடேசன், உள்ளிட்ட 4 பேரிடமும் விசாரணை நடந்தது.
17-ந் தேதி இரவு 8.30 மணிக்கு நடந்த சம்பவம் இதுதான்: "பிரவீன்குமாரும், அவரது அப்பாவும் குடிபோதையில் வீட்டில் இருந்துள்ளனர்.. பிரவீன்குமார் குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தபோது, வெங்கடேசன் அங்கு வந்தார்.. இது யார் குழந்தை என்று துருவி துருவி கேட்டார்.. இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், கலைரஞ்சனியிடம் இது யார் குழந்தை என்று அதே கேள்வியை கேட்டார்.. அப்போதுதான் தன் முதல் கணவருக்கு பிறந்த என்னுடைய குழந்தை என்றார்.
இதை கேட்டு பிரவீன் குமாருக்கும் அவரது அப்பாவுக்கும் தலையே சுற்றிவிட்டது.. இவ்வளவு நாள் காதலித்து ஏமாற்றியதும் இல்லாமல், கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை இருப்பதையே மறைத்துவிட்டாரே என்ற ஆத்திரத்தில், பிரவீன்குமார், லாவண்யாவிடம் இருந்த குழந்தையை பிடுங்கி தரையில் ஓங்கி அடித்தார்.. இதில் குழந்தை பேச்சுமூச்சு இல்லாமல் மயங்கி விழுந்தது. இதனால் பயந்துபோன குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு போனார்கள்.. ஆனால் குழந்தை இறந்துவிட்டது.
இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.. இப்போது பிரவீன் குமார் கைதாகி உள்ளார்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.. "சிங்கிள்" என்று சொல்லி ஏமாற்றிய பெண்ணால், ஒரு குழந்தையை அநியாயமாக இப்படி கொன்று விட்டார்களே என்று அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையடுத்து பிரவீன் குமார் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.. அதில் அவர் சொன்னதாவது: "கலைரஞ்சினியால் எங்களால் ஜாலியாக இருக்க முடியவில்லை.. என்கிட்ட முதல் கல்யாணம் ஆனதை மறைக்கவேதான், ஆத்திரத்தில் குழந்தையை பார்த்ததும் கோபம் வந்துடுச்சு.. அந்த வெயில்தான தூக்கி அடிச்சு கொன்னே.. குழந்தை பேச்சுமூச்சு இல்லாமல் விழுந்துடவும், அதையே சாக்காக வெச்சு வலிப்புன்னு பொய் சொல்லி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனோம்.. அப்போ முதல் புருஷனுக்கு விஷயம் தெரிஞ்சு, எங்களை போலீசில் சிக்க வெச்சிட்டார்' என்றார்,.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications