வேலூர் காட்டுக்குள் மர்மம்! பேர்ணாம்பேட்டு குட்டைக்குள் பார்த்தால் "3 எச்சங்கள்" ஆடிப்போன ஆபீசர்ஸ்
வேலூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு காட்டுப் பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள குட்டையில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. இது வனத்துறை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் உண்டு பண்ணி வருகிறது.. மாவட்ட வனத்துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணயை முடுக்கி விட்டுள்ளனர்..
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலை சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவை கொண்டது... இங்குள்ள சாத்கர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 900 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மலை உள்ளது.

வேலூர் காட்டில் மர்மம்
இந்த மலையின் ஒரு பகுதியில் குட்டையும் உள்ளது.. இந்த குட்டையில் 3 யானைகள் இறந்து கிடப்பது அங்குள்ளவர்களுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்..
இதுகுறித்து உடனடியாக வேலூர் மண்டல வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.. விரைந்து வந்த அவர்கள், இறந்து கிடந்த 3 யானைகளையும் பார்வையிட்டனர்.. அப்போதுதான் அதில் ஆண் குட்டி, பெண் யானை இறந்ததும் தெரியவந்தது.. இந்த 3 யானைகளுமே அழுகிய நிலையில் கிடந்தன.. அத்துடன் யானைகள் இறந்து பல நாட்கள் ஆகிவிட்டிருந்ததால், யானைகளின் உடல்கள் எலும்புக்கூடாக மாறி விட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
எலும்பு கூடுகள் - போஸ்ட் மார்ட்டம்
ஆனால், இந்த யானைகள் எப்படி இறந்தன என்று தெரியவில்லை.. எனவே இதுகுறித்த விசாரணையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்... இப்போதைக்கு யானைகளின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
இன்றுதான் அதாவது வெள்ளிக்கிழமையன்று யானைகளின் உடல்கள் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படும் என்று சொல்லி உள்ளனர். அந்த ரிப்போர்ட் வந்தால்தான், யானைகள் எப்படி இறந்தன என்பது தெரியவரும் என்கிறார்கள் அதிகாரிகள்..
அடுத்தடுத்த யானைகள்
இதே பேரணாம்பட்டு காட்டுக்குள் சமீபத்தில்தான் 2 யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.. கடந்த நவம்பர் 30ம் தேதி பேர்ணாம்பட்டை அடுத்துள்ள சிந்தகணவாய் காட்டுப்பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க யானையும், அக்டோபர் மாதம் பேர்ணாம்பட்டு அடுத்துள்ள பாஸ்மார்பெண்டா வனப்பகுதியில் சுமார் 7 வயது மதிக்கத்தக்க யானையும் இறந்து கிடந்தன.
அந்த யானைகளின் உடம்பில் ரத்த காயங்கள் தென்பட்டன.... இப்போது மேலும் 3 யானைகள் இறந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
இதுகுறித்த கவலையை வெளிப்படுத்தி உள்ள வன ஆர்வலர்கள், இங்கு யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.
மின்வேலி? விஷ நீர்?
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "யானைகளின் மர்ம உயிரிழப்புக்கு காரணம் தெரியவில்லை.. உடல்கள் அழுகி கிடக்கின்றன.. இதனால் எப்போது அந்த யானைகள் இறந்தன என்பதை துல்லியமாக அறிய முடியாது.. அதேபோல காரணமும் உடனடியாக தெரியாது.
கால்நடை மருத்துவ குழுவினரின் பரிசோதனை நடந்து வருகிறது.. குட்டையில் நீர் குடிக்க சென்றபோதுதான் யானைகள் இறந்துள்ளன..
ஒருவேளை விஷநீரை குடித்திருக்குமா? அல்லது மின்வேலி, இயற்கை காரணங்கள் ஏதாவது இருக்குமா? யாராவது யானைக்கு தீங்கு நினைத்து இப்படியான செயல்களை செய்தார்களா? என்பது தெரியவில்லை. விசாரணை நடக்கிறது. அதேபோல வனத்துறை சிறப்பு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு, ரோந்து பணிகள் தீவிரமாகி உள்ளன..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications