பச்சையிலிருந்து நீல நிறத்திற்கு மாறும் சைக்கிள்கள்.. தமிழக அரசின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீல நிறத்தில் மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை, எழுதுகோல், மிதிவண்டி, லேப்டாப் உள்ளிட்ட நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது பிளஸ் 2 படித்து வரும் அந்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் தற்போது 84 அரசு மற்றும் அரசு நிதியுதவி, ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 6,348 மாணவர்கள், 7 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 13,395 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது. இதற்காக தனியார் மிதிவண்டி நிறுவனம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருநீலம்
தனியார் நிறுவனத்தில் மிதிவண்டிகளை தயார் செய்யும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக பச்சை நிறத்தில் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் அதாவது கரு நீல நிறத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சைக்கிள்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட சைக்கிள்களும் நீல நிறத்தில் இருந்தன. 2021-2022 ஆம் ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் பணி நடைபெற்றன. நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ல 12,969 மாணவர்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

உற்பத்தி
கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சைக்கிள்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டு பெறப்பட்டிருந்தன. நிகழாண்டில் வேறு ஒரு நிறுவனத்தில் சைக்கிள் உதிரிபாகங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த சைக்கிள்கள் தொலைதூர கிராமத்தில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர உதவுவதாக பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். கலர் மாற்றத்திற்கு காரணம் என்னவென தெரியவில்லை.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications