வேலூருக்குள் தோன்றிய "உருவம்".. AI கேமராவில் பார்த்தீங்களா? குடியாத்தம் வனப்பகுதியில் ஒரே பரபரப்பு
வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் அஞ்சலி மரணத்துக்கு பிறகு, ஒட்டுமொத்த மக்களும் நிலைகுலைந்து காணப்படுகிறார்கள்.. குடியாத்தத்தை சுற்றியுள்ள வனப்பகுதி மக்களும், சிறுத்தை நடமாட்டம் காரணமா, மிகப்பெரிய அச்சத்துக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி துருவம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்.. 70 வயதான இவர் ஒரு விவசாயி... மனைவி பெயர் வளர்மதி. இந்த தம்பதிக்கு 5 மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் 4 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.. 22 வயதான கடைசி மகள் அஞ்சலி, இளங்கலை வணிகவியல் பட்டதாரி ஆவார்.. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, வீட்டின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு அஞ்சலி சென்றிருக்கிறார்.. அப்போது, அங்கு வந்த சிறுத்தை, அஞ்சலியை கடித்து குதறி கொன்றுவிட்டது.
போராட்டம்: சிறுத்தையின் பிடியில் அஞ்சலி இருப்பதை கண்டு, அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.. ஆனால், அதற்குள் அந்த சிறுத்தை தப்பி ஓடிவிட்டது... பின்னர் தகவலறிந்த சப்-கலெக்டர் சுபலட்சுமி தலைமையில் வருவாய்துறையினர், கே.வி.குப்பம் போலீசார், அஞ்சலியின் சடலத்தை மீட்க முயன்றனர்.
ஆனால் சடலத்தை எடுக்கவிடாமல் அந்த பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, அஞ்சலியின் சடலத்தை மீட்ட போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பான வழக்கையும் பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.
போஸ்ட் மார்ட்டம்: எனினும், சிறுத்தை தாக்கியதில் அஞ்சலி என்ற பட்டதாரி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. ஏற்கனவே, குடியாத்தம் அருகே வீரிசெட்டிபள்ளி, அனுப்பு, காந்தி கணவாய் உள்ளிட்ட கிராமங்களில் சிறுத்தை தாக்கியதில், ஆடுகள், கோழிகள், கன்று குட்டி போன்றவை இறந்து வருகின்றன.
சில நாட்களுக்குமுன்புகூட காந்தி கணவாய் பகுதியில் சிறுத்தை தாக்கி பசுமாடு ஒன்று இறந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், பரதராமி, அனுப்பு, காந்தி கணவாய், மோடிகுப்பம் , மோர்தானா , ரங்கசமுத்திரம் , பேரணாம்பட்டு உள்ளிட்ட வன பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டம் தகவல் பரவியதால் அந்த பகுதியிலுள்ளவர்கள் எல்லாம் கலக்கம் அடைந்தனர்.
ஆடு, பசுமாடு: இந்நிலையில், அச்சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. குறிப்பாக, காந்தி கணவாய் பகுதியில் சிறுத்தையை கண்காணிக்க AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.. இந்த கேமராக்கள், 24 மணி நேரமும் வனப்பகுதியில் வரும் உயிரினங்களை பதிவு செய்து உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வாட்ஸ் அப்பில் பதிவுகளை அனுப்பிவிடும்.
இந்த அதிநவீன கேமராவை, அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். நேற்றுகூட, வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, ஆர்டிஓ சுபலட்சுமி ஆகியோர், குடியாத்தம் அடுத்த காந்தி கணவாய் கிராம வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கேமராவில் உருவம்: ஆனால், இதுவரை அந்த சிறுத்தையின் உருவம் கேமராவில் பதியவில்லை.. அதனால், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று குடியாத்தம் வன ரேஞ்சர் வினோபாவுக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.
அப்போது, சிறுத்தை மெதுவாக பதுங்கி நடந்து வருவது கேமராவில் பதிவாகியிருந்தது. எனவே, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று குடியாத்தம் வன ரேஞ்சர் வினோபாவுக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.. ஏஐ தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட கேமராவில் அசையும் எந்த பொருளையும் உடனடியாக உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், விரைவில் சிறுத்தை சிக்கும் என்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications