வாணியம்பாடியில் அசந்து தூங்கிய பெண்.. வேலூர் ஆம்னி பஸ் டிரைவரை பற்றி.. சென்னையில் புகார் தர காரணம்?
வேலூர்: வாணியம்பாடி அருகே ஆம்னி பஸ்ஸில் வந்து கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது.. இதையடுத்து, கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் அந்த பெண் புகார் செய்தது எதற்காக? என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சென்னையை சேர்ந்த 51 வயதுடைய பெண், கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அதில் "பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் நான், மாதத்தில் ஒரு நாள் மட்டும் சென்னைக்கு வந்து எனது மகளை பார்த்து விட்டு மீண்டும் பெங்களூருக்கு செல்வது வழக்கம்.

ஆம்னி பஸ்: அதன்படி வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது வாணியம்பாடி அருகே பேருந்து நின்றபோது நான் பயணித்த பேருந்தில் ஏறியவர் நான் அமர்ந்து இருந்த சீட்டுக்கு பின்னால் அமர்ந்து வந்தார். திடீரென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து ஆம்னி பேருந்து நிலையத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.. அப்போதுதான், அவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்து டிரைவர் சேகர் (38) என தெரியவந்தது. அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததும் உறுதியானதையடுத்து, கைதானார்.
வாணியம்பாடி: ஆனால், வாணியம்பாடியில் பாலியல் தொல்லை தந்ததற்கு, கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் எதற்காக புகார் செய்தார்? என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.. சம்பந்தப்பட்ட பெண் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர்..
பெங்களூருவில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு ஆம்னி பஸ்ஸில் வந்தபோது, நன்றாக தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.. நள்ளிரவில் வாணியம்பாடியில் பஸ் நின்றுள்ளது.. அப்போதுதான், அந்த பஸ்ஸில் ஏறிய மாற்று ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், உடனடியாக இதுகுறித்து டிரைவரிடம் புகார் சொன்னாராம்.. ஆனால், டிரைவர் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம்..
அவமரியாதை: பிறகு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இறங்கியதுமே, அந்த பெண், தன்னை அழைக்க வந்த கணவரிடம் நடந்தவற்றை கூறியதாக சொல்லப்படுகிறது. கணவர் இதை தட்டி கேட்டதற்கு மாற்று ஓட்டுநர் அவமரியாதையுடன் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகுதான், தம்பதி இருவரும் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, கோயம்பேடு பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாற்று பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டது, காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
பாலியல் சீண்டல்: "சென்னை, கொடுங்கையூர் பகுதியைச்சேர்ந்த 51 வயது பெண் அவரது கணவருடன் நேற்று (02.02.2025) பெங்களூரில் தனியார் பேருந்தில் ஏறி, சென்னை நோக்கி வந்த கொண்டிருந்த போது, இரவு சுமார் 11.00 மணியளவில் கோயம்பேடு பகுதியில் பேருந்து வந்த போது, பேருந்தின் மாற்று ஓட்டுநர் உறங்கிக்கொண்டிருந்த மேற்படி பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிஎன்எஸ் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இன்று ஆஜர்: கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட நாமக்கல் பரமத்தி வேலூர், கே.புதுப்பாளையம், ராமசாமி மகன் கிருஷ்ணசேகர் (38) என்பவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட கிருஷ்ணசேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications