வேலூர் "சிவநாதபுரத்தில்" அதிசயம்.. மலையில் திடீர்னு தோன்றியதை பாருங்க.. "மஷ்ரூம்" மாதிரி இருக்குல்ல
வேலூர்: வேலூர் மாவட்டம் சிவநாதபுரத்தில் அதிசயம் ஒன்று தென்பட்டுள்ளது.. இதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு செல்கிறார்கள்.. என்ன காரணம்?
காளான் வடிவத்திலேயே பாறைகள் வேலூரில் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, இஸ்ரேல் நாடு நிகோல் டிம்னா பூங்காவில், இத்தகைய காளான் வடிவத்தில் பாறைகள் உள்ளன.

திருப்பத்தூர்: அதேபோன்று இந்தியாவில், தார் பாலைவனத்திலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோவில் வட்டம் என்ற இடத்திலும் இதே வடிவிலான காளான் பாறைகள் இதற்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால், வேலூரிலும் புதிதாக தென்பட்டுள்ளது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. தொல்லியல் துறை ஆய்வாளர் தமிழ்வாணன் வேலூர் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, இப்படியான காளான் வடிவிலான அதிசய பாறையை பார்த்தாராம்.. சிவநாதபுரம் அருகே குருமலையில் இந்த பாறையை கண்டுபிடித்துள்ளார்.
ஊசூர்: அதாவது, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில், சிவநாதபுரம் அருகே உள்ளது குருமலை மலைப்பகுதி.. இந்த மலையில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல் மலை, பள்ள கொல்லைமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த குருமலையில் செல்லியம்மன் கோயில் ஒன்றும் உள்ளது.
இந்த கோயிலின் பக்கத்தில்தான், காளான் வடிவிலான, அதுவும் ஒரே கல்லால் ஆன பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் இந்த கோயிலில் விழா நடத்தும்போது இந்த பாறையின் பக்கத்தில் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்களாம்.
கற்பாறை: மேலே குடை போல, காளான் மாதிரி இருந்தாலும், இது நிஜ பாறை.. அதுவும் கடினமான, மென்மையான, அடுக்குகளை கொண்ட பாறை... காற்றால் கடத்தி வரப்படும் மணல் துகளால் தாக்கப்பட்டு, நாளடைவில் அந்த பாறைகளின் கீழ்ப்பகுதி மணல் அரிப்பால் சேதமடைந்து, காளான் போன்ற வடிவில் அமைந்துவிடுகின்றன..
நீண்டகால அரிப்பினால் பாறை தூணானது தரையை ஒட்டி மட்டும் அரிப்புக்கு உள்ளாகி, மேற்புறம் விரிந்த நிலையில் காளான் போன்று தோற்றமளிப்பதால், இதை காளான் பாறை என்கிறார்கள்.
இங்கு கண்டறியப்பட்ட இந்த காளான் வடிவிலான பாறையை, வேலூர் மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த காளான் பாறைதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications