வேலூரில் கணவனின் பிறந்த நாளில்.. 3 வயது குழந்தை பார்க்கக்கூடாத கோலத்தில் சரண்யா.. அதிர்ந்த உறவுகள்
வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆனந்தனுக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இவர் கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவனின் பிறந்த நாள் அன்று கோவிலுக்கு வர மறுத்ததால், சரண்யா எடுத்த முடிவு மொத்த குடும்பத்தையும் ஆடிப்போக வைத்துள்ளது.
கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனை என்றாலும், பேசி தீர்க்க வேண்டும். மாறாக குழந்தைகளை விட்டு விட்டு உலகத்தைவிட்டே செல்வது போன்ற தவறான முடிவெப்பது என்பது மிகவும் முட்டாள் தனமான முடிவு ஆகும். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே கணவர் பிறந்தநாளில் அவர் கோவிலுக்கு வராததால் மனமுடைந்த அவரது மனைவி வாழ்க்கையை முடித்துக் கொண்டார். தாய் தூக்கில் தொங்கியதை பார்த்த 3 வயது மகன் அவரது கால்களை பிடித்து கதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 30 வயதாகும் ஆனந்தன் என்பவர் அதே பகுதியில் கணினி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆனந்தனுக்கு சரண்யா என்ற பெண்ணுடன் (29) ஐந்து வருடம் முன்பு திருமணம் நடந்தது. ஆனந்தன் சரண்யா தம்பதிக்கு 3 வயதில் சஞ்சீவன் என்ற மகனும், 1 வயதில் தமிழ் யாழினி என்ற மகளும் உள்ளனர்.
நேற்று ஆனந்தனுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது மனைவி குடும்பத்தாருடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என கணவரை அழைத்ததாக சொல்லப்படுகிறது.. அதற்கு ஆனந்தன் 'கம்ப்யூட்டர் சென்டரை' திறந்து வைத்து விட்டு வருவதாக பதில் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த சரண்யா, திடீரென வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று தூக்கிட்டு உயிரையே விட்டுவிட்டார். சில நிமிடமே இருக்கும கோபம், சில நிமிடமே நீடிக்கும் வருத்தம், சில நிமிடமேஇருக்கும் விரக்திக்காக வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் ஆகும். தனது தாய் இருந்தகோலத்தை பார்த்த மகன் சஞ்சீவன் கால்களை பிடித்து அம்மா, அம்மா என கதறி அழுதான். அவனது கதறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றபோது சரண்யா தூக்கில் தொங்கியதையும் 3 வயது மகன் அவரது கால்களை பிடித்து கதறியதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து சரண்யாவை தூக்கிலிருந்து மீட்டிருக்கிறார்கள்.
உடனடியாக அவரை சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சரண்யா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவர் உயிரிழந்தது குறித்து வேலூர் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கணவர் பிறந்த நாளில், மகன் கண் முன்னே தாய் உயிரைவிட்ட சம்பவமும் 3 வயது மகன் அவரது கால்களை பிடித்து கதறி அழுத சம்பவமும், மொத்த ஊரையும் கலங்க வைத்தது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications