Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில்.. பாழடைந்த பங்களாவில் அசிங்கப்பட்ட ஜோதி.. குடியாத்தம் வீட்டிலும் கேவலம்.. ரேஷன் அரிசி வேற

Subscribe to Oneindia Tamil

வேலூர்: குடியாத்தம், பள்ளிகொண்டா பகுதிகளில் விடிய விடிய போலீசார் சோதனை வேட்டையை நடத்தியிருக்கிறார்கள்.. இதில் சிக்கியவரையும் கைது செய்திருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
தமிழ்நாட்டை பொறுத்தவரை, அரிசி அட்டைதாரர்களின் சுமையை தமிழக அரசு குறைத்து வருகிறது.. ஆனால், ரேஷன் அரிசி கடத்தல்களை மட்டும் முற்றிலுமாக இன்னமும் ஒழிக்க முடியாமல் உள்ளது.

Vellore Pallikonda Jothi Ration Rice Gudiyatham

முக்கியமாக, கேரளம், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.. தமிழக எல்லைகளில் இதற்கென்றே, புரோக்கர்கள் இருக்கிறார்களாம்... இவர்கள்தான், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு, இந்த ரேஷன் பொருட்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள்..

அட்டைதாரர்கள்: இதுபோன்றவர்களால்தான், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, பருப்பு முறையாக கிடைப்பதில்லை என்று பொதுமக்களின் புகார்கள் அதிகரித்தபடியே வருகின்றன.

எனவே, இந்த கடத்தலை ஒழிக்க தமிழக அரசும் எத்தனையோ விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததன் அடிப்படையில், தற்சமயம் ஓரளவு ரேஷன் பொருட்களின் கடத்தல் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொருபுறம் இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டு வருகிறது.

அதிரடி கைது: இறுதியில் 5 மாதங்களில், 3,660 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரேஷன் பொருளை கடத்தி 3,794 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதோ இப்போதும் போலீசாரின் வேட்டை தமிழகமெங்கும் தொடர்ந்து வருகிறது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், பள்ளிகொண்டா பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பள்ளிகொண்டா பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள்..

அப்போது, பள்ளிகொண்டா நடுத்தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சுமார் 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. இதையடுத்து, அந்த கட்டிடத்திலிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.. பின்னர், இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்தபோதுதான், பாழடைந்த கட்டிடத்தில் அரிசியை கொண்டுவந்து கடத்தலில் ஈடுபட்டது ஜோதி என்பது தெரியவந்தது.

ஜோதி மீண்டும் கைது: இறுதியில் ஜோதியை கைது செய்த போலீசார் ஜெயிலில் அடைத்தனர். ஏற்கனவே 4 முறை ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், ஜோதி குண்டாசில் கைதாகியிருக்கிறார். ஒவ்வொருமுறையும் ரிலீஸாகி வெளியே வந்ததுமே, மறுபடியும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டும் வந்துள்ளர். ஒருமுறை தன்னுடைய வீட்டிலேயே சுமார் 120 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தபோதும் ஜோதி கையும் களவுமாக சிக்கினார்.

அதேபோல, குடியாத்தம் அடுத்த சாமியார் மலை அடிவாரம் பகுதியிலும், ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சாமியார் மலை அடி வாரத்தில், இதற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக தெரியவரவும், அங்கு விரைந்து சென்று, ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையை நடத்தினார்கள்.

விடிய விடிய சோதனை: நேற்றிரவு முழுவதும் நடத்திய சோதனையில், 500 கிலோ ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த தயாராக வைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர்.. இந்த அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தும் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து, குடியாத்தம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய ஆட்டோ டிரைவர் மற்றும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+