Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. விக்கிரவாண்டிக்கு வண்டியை விடும் அதிமுக! சீனியர் சண்டையால் சிக்கல்.!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த சில நாட்களுக்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் போட்டியிடுவது தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருவதாகவும், இதனால் விழுப்புரம் அதிமுக பரபரப்பாக காணப்படுவதாக கூறுகின்றனர் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள்.

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பங்கேற்று இருந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

vikravandi assembly by election 2024 cv shanmugam edappadi palaniswami admk 2024

இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் ஆறாம் தேதி மரணமடைந்தார். தொடர்ந்து 8ஆம் தேதி அந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை அதிமுக, திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை செய்து வருகின்றன. இன்னும் சில நாட்களுக்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது தெரிய வந்துவிடும்.

ஈரோடு இடைத்தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி புறக்கணித்த நிலையில் இந்த தேர்தலில் அது போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் பாஜக பாமக கூட்டணி வன்னியர் வாக்குகளை நம்பி நிச்சயமாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அதிமுகவை பொறுத்த வரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுகவை பொருத்தவரை கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த முத்தமிழ்ச் செல்வன் மீண்டும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச் செல்வன் 2021 தேர்தலில் புகழேந்தி இடம் தோல்வி அடைந்தார். புகழேந்தி 93 ஆயிரத்து 730 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் 84,157 ஓட்டுகளை பெற்றிருந்தார். வெறும் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் புகழேந்தி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக தற்போது முத்தமிழ்ச் செல்வன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் விழுப்புரத்தில் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். தேசிய அரசியலில் இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை மாநில அரசியல்தான் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு செல்லும் என்பதால் அவரும் போட்டியிடலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் சீவி சண்முகம் போட்டியிட்டால் வன்னியர் வாக்குகள் கிடைக்கும் என்பதோடு, வாக்காளர்களை ’நன்கு கவனித்துக்’ கொள்வார் என்பதால் அவரது ஆதரவாளர்கள் சி.வி சண்முகமே போட்டியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிட இருவருமே ஆர்வம் காட்டி வரும் நிலையில் தலைமை எடுக்கும் முடிவு என்ன என்பதை தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எது எப்படி எனினும் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக வேட்பாளரை வீழ்த்துவது அவ்வளவு எளிது கிடையாது. மேலும் தற்போதைய நிலவரப்படி விக்கிரவாண்டியில் திமுகவின் கையே ஓங்கி இருப்பதால் இந்த தேர்தல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்கின்றனர் விழுப்புரம் அரசியல் கட்சியினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+